பிரணாப் முகர்ஜி மரணம்.. டாப்ஸி முதல் அஜய் தேவ்கன் வரை.. பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்!

மும்பை: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

ஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்- வீடியோ

முன்னாள் குடியரசுத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவை அகற்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது.

பின்னடைவு

பின்னடைவு

இதனைத் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமடைநத்து.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

இதனை தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார் பிரணாப் முகர்ஜி. இந்நிலையில் நினைவு திரும்பாமலேயே பிரணாப் முகர்ஜி இன்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி பதிவிட்டுள்ள டிவிட்டில் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். முழு டீமுக்கும் அன்புடன் இரவு விருந்தளித்தார். அந்த அனுபவத்தை ஒரு போதும் மறக்க முடியாது, அவருடைய அன்பான வார்த்தைகளையும். நீங்கள் மிஸ் பண்ணப்படுவீர்கள் சார் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜய் தேவ்கன்

நடிகர் அஜய் தேவ்கன்

இதேபோல் நடிகர் அஜய் தேவ்கன் பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்தியா ஒரு சிறந்த அரசியல்வாதியையும் மரியாதைக்குரிய தலைவரையும் இழந்துவிட்டது. அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரித்திஷ் தேஷ்முக்

நடிகர் ரித்திஷ் தேஷ்முக்

இதேபோல் நடிகர் ரித்திஷ் தேஷ்முக், பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆழ்ந்த வருத்தம்!! இந்தியாவுக்கு ஒரு பெரிய இழப்பு. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மரியாதைக்குரிய பிரணாப் முகர்ஜி சார் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பணிகள் மற்றும் பங்களிப்புக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது முழு குடும்பம் மற்றும் அவரது மில்லியன் கணக்கான ஃபாலோயர்களுக்காக எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர்

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரும் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பிரணாப் முகர்ஜி காலமானதைக் கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். நம் முன்னாள் ஜனாதிபதி, ஒரு பாரத் ரத்னா மற்றும் ஒரு முழுமையான மனிதர். எங்களுக்குள் அன்பான மற்றும் ஒரு நல் உறவு இருந்தது. அவரது குடும்பத்திற்கு மனமார்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

நடிகை ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவால் துயரமடைந்துள்ளேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். 2020ஆம் ஆண்டில் மேலும் ஒரு இழப்பு என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X