வெள்ளித் திரைகளை வலிமை படம் எரிய வைக்கும்... பாலிவுட்டிலிருந்து வந்த கமெண்ட்டை பாருங்க
சென்னை : நடிகர் அஜித்குமார், ஹுமா குரேஷி லீட் கதாபாத்திரங்களில் நடிக்க உருவாகியுள்ள படம் வலிமை.
போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 24ம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
படத்தை பார்க்கும் பல பிரபலங்கள் சிறப்பான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

வலிமை படம்
நடிகர் அஜித்குமார் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்த அஜித் -எச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணி இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. தற்போது மூன்றாவது முறையாகவும் இந்தக் கூட்டணி இணையவுள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு
நேர் கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் அடுத்த படத்திற்காக அவரது ரசிகர்கள் தொடர்ந்து காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அவரது வலிமை படமும் ரிலீஸ் தள்ளிப் போனது. கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா பரவலால் ரிலீஸ் தள்ளிப் போனது.

பிப்ரவரி 24ம் தேதி ரிலீஸ்
தற்போது வரும் 24ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். படத்தின் நாங்க வேற மாரி மற்றும் அம்மா பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

சிறப்பு புகைப்படங்கள்
இதேபோல படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்தை பெற்றது. படத்தில் ரேஸ் மற்றும் பைக் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தின.

மிரட்டலான விமர்சனம்
இதனிடையே படத்தை பார்க்கும் சிலர் சிறப்பான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் பாலிவுட் சினிமா பிரமுகரும் முன்னாள் சென்சார் போர்ட் ஆலோசகருமான ராஜேஷ் வாசனி படம் குறித்த மிரட்டலான விமர்சனத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹாலிவுட் படங்களுக்கு பதில்
ஜீ ஸ்டூடியோவின் பான் இந்தியா குழுவுடன் இணைந்து படத்தை அவர் பார்த்ததாகவும் படத்தை பார்த்து மிரண்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் & மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு இந்திய சினிமாவின் பதில் தான் வலிமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளித் திரைகளை எரிக்கும்
வெள்ளித் திரைகளை வலிமை படம் எரிய வைக்க போகிறது என்றும் ஷோமேன் போனி கபூரின் த்ரில்லர் உங்கள் மூச்சை இழுக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். புஷ்பா படம் ஆரம்பம் என்றால், வலிமை க்ளைமாக்ஸாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வலிமைக் கொண்டாட்டம்
மேலும் பிப்ரவரி 24, 2022 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த விமர்சனம் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அப்போ ரசிகர்கள் இன்னும் சில தினங்களில் வலிமை கொண்டாட்டத்திற்கு தயாராகலாம்.


Click it and Unblock the Notifications











