பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாலிவுட் பிரபலங்கள்
மும்பை: இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததற்காக பாலிவுட் பாடகர் அங்கித் திவாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன்பே சில பாலிவுட் பிரபலங்கள் பலாத்கார வழக்கில் கைதாகியுள்ளனர்.
பலாத்கார வழக்கில் பாலிவுட் பிரபலங்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இயக்குனர், நடிகர், பாடகர் என்று சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்படி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாலிவுட் பிரபலங்களை பார்ப்போம்.

அங்கித்
ஆஷிகி 2 படத்தில் சுன் ரஹா ஹை என்ற பாடலை பாடி பிரபலம் ஆன அங்கித் திவாரி 28 வயது பெண்ண கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இன்று மும்பை வெர்சோவா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தர் குமார்
நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரான இந்தி நடிகர் இந்தர் குமார் 22 வயது மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஷைனி அஹுஜா
இந்தி நடிகர் ஷைனி அஹுஜா தன் வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த பெண் வழக்கை வாபஸ் பெற்றதால் அவர் தொடர்ந்து ஜாமீனில் வெளியே உள்ளார்.

மாதுர் பந்தர்கர்
இயக்குனர் மாதுர் பந்தர்கர் பாலிவுட்டில் வளர்ந்து வந்த நடிகை ப்ரீத்தி ஜெயினுக்கு தனது படத்தில் ஹீரோயின் வாய்ப்பு அளிப்பதாக கூறி அவரை பலாத்காரம் செய்ததாக கடந்த 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications











