ஊரே வியக்கும்படி நடந்த அம்பானி மகன் நிச்சயதார்த்தம்: பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு

By Siva

மும்பை: தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் மற்றும் ஸ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷுக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும் மும்பையில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அம்பானி வீட்டு விசேஷத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் நடிகர் ரன்பிர் கபூர், நடிகை ஆலியா பட்டும் கலந்து கொண்டனர்.

ஸ்லோகா

ஸ்லோகா

ஆகாஷ் தனது பள்ளித் தோழியான ஸ்லோகாவிடம் கடந்த மார்ச் மாதம் காதலை சொன்னவுடன் அவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இருவீட்டாரும் சந்தித்து திருமணத்தை நிச்சயித்துள்ளனர்.

கவுரி

கவுரி

ஷாருக்கான் தனது மனைவி கவுரி கான், மூத்த மகன் ஆர்யன் கானுடன் அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டார். மிகவும் ஸ்டைலான அம்மா கவுரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராத்யா

ஆராத்யா

நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா மற்றும் கணவர் அபிஷேக் பச்சனுடன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

நவ்யா

நவ்யா

அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா தனது மகள் நவ்யாவுடன் வந்திருந்தார். இருவருமே அபு ஜானி சந்தீப் கோஸ்லாவின் டிசைனர் சேலை அணிந்திருந்தனர்.

ஆலியா

ஆலியா

நடிகர் ரன்பிர் கபூரும், ஆலியா பட்டும் அம்பானி வீட்டு விசேஷத்தில் கை கோர்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் காதலிப்பது தான் பாலிவுட்டின் ஹாட் டாபிக்.

அஞ்சலி

அஞ்சலி

அம்பானி வீட்டு விசேஷங்களில் கண்டிப்பாக சச்சினை பார்க்க முடியும். நிச்சயதார்த்தத்திலும் சச்சின் தனது மனைவி அஞ்சலி, மகள் சாராவுடன் கலந்து கொண்டார்.

ஆமீர்

ஆமீர்

முகேஷ் அம்பானிக்கு நெருக்கமான நடிகர் ஆமீர் கான் ஆகாஷின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தனது மனைவி கிரண் ராவுடன் கலந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X