நீரவ் மோடியை பற்றி பஞ்சாப் வங்கி படம் எடுத்தால் என்ன பெயர் வைக்கும் தெரியுமா?
Recommended Video

மும்பை: ரூ.11, 360 கோடி கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடியை பாலிவுட் பிரபலங்கள் விளாசியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 360 கோடி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாலிவுட் பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வரி
நாம் 30.9% வருமான வரி, 18% ஜிஎஸ்டி மற்றும் வாட் கட்டுகிறோம். ஆனால் நீரவ் மோடி ரூ. 11 ஆயிரம் கோடியுடன் தப்பித்துவிட்டார். நான் ஏன் வரி செலுத்த வேண்டும். நாங்கள் வரி கட்ட அதை எடுத்துக் கொண்டு மறுபடியும் யாராவது தப்பியோடவா? என நடிகை ரிச்சா சதா கேள்வி எழுப்பியுள்ளார்.

வைரம்
ஒரு வங்கி 2011ம் ஆண்டில் இருந்து ஒருவருக்கு ரூ. 11,300 கோடி கடன் கொடுத்தும், அந்த சமயத்தில் ஒரு விசாரணை கூட நடக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை. மின்னுவது எல்லாம் வைரம் அல்ல என்கிறார் ரிஷி கபூர்.

நரேந்திர மோடி
நட்பாக பழகும் நரேந்திர மோடி பிரதமராக இருக்கும்போது ஊழல்வாதி தொழில் அதிபர்கள் ஏன் நாட்டை விட்டு ஓடுகிறார்கள்?
அவர்கள் ஏன் அவர்களின் எதிரி நேர்மையான சோனியா காந்தி ஆட்சி செய்தபோது ஓடவில்லை?
ரகுராம் ராஜன் தற்போது எங்கே போனார் என்று இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கேட்டுள்ளார்.

வங்கி கணக்கு
நீரவ் மோடியின் வங்கி கணக்கு அவரின் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று பாலிவுட் இயக்குனர் அனுபவ் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

படம்
ஃபைன்டிங் நீமோ- எ மூவி பை பஞ்சாப் நேஷனல் வங்கி என்று கிண்டல் செய்துள்ளார் புகைப்படக் கலைஞரும், தயாரிப்பாளருமான அதுல் கஸ்பீகர்.


Click it and Unblock the Notifications











