பட்டாம்பூச்சியை பார்த்து பயத்தில் தெறித்தோடும் நடிகை
மும்பை: பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு உள்ள சில பயங்கள் பற்றி பார்ப்போம்.
ஜிம்முக்கு போய் உடம்பை கும்மென்று வைத்திருக்கும் பாலிவுட் நடிகர், நடிகைகள் எதை பார்த்தால் பயப்படுவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
தெரியாவிட்டால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பிரியங்கா சோப்ரா
விஜய்யின் தமிழன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா சிலந்தியை பார்த்தால் பயத்தில் பதறி ஓடுவாராம்.

சோனம் கபூர்
பாலிவுட் நடிகர், நடிகைகளை பேட்டிகளில் விளாசித் தள்ளும் சோனம் கபூருக்கு லிஃப்ட்டில் செல்ல பயமாம்.

வித்யா பாலன்
பல நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களில் கூட தில்லாக நடிக்கும் வித்யா பாலன் பூனையை கண்டால் தெறித்து ஓடுவாராம்.

ரன்பிர் கபூர்
கன்னியரின் தூக்கம் கலைக்கும் இளம் நடிகர் ரன்பிர் கபூருக்கு சிலந்தி என்றால் அவ்வளவு பயமாம்.

செலினா
பட்டாம் பூச்சியை பார்த்து யாராவது பயப்படுவார்களா? படுகிறாரே நடிகை செலினா ஜேட்லி.
Comments


Click it and Unblock the Notifications