சாதி மத பேதமின்றி பாலிவுட்டை ஒன்றிணைத்த விநாயகர்
மும்பை: விநாயகர் சதுர்த்தி பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் களை கட்டியது.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை திரு உருவமாகக் கொண்ட விநாயகரின் திரு அவதார தினம் நேற்று நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சீமராஜா, யூ டர்ன் போன்ற திரைப்படங்களும், ரஜினிகாந்தின் 2.0 டீசரும் மற்றும் திரையுலகில் பல முக்கிய நிகழ்வுகளும் நேற்று நடைபெற்றன. திரையுலகினர் பலரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதோடு, வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
எப்போதுமே கொண்டாட்டத்திற்கு பெயர்போன பாலிவுட் திரையுலகில், விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மும்பை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, மலாய்கா அரோரா, கங்கனா ரனாவத், ஹெலன், அதிதி ராவ் ஹையதரி உள்ளிட்ட பலர் தங்களின் வீடுகளில் அழகான விநாயகர் சிலையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். விநாயகர் ஊர்வலத்திலும் கலந்துகொண்டனர்.
மும்பையில் உள்ள அம்பானி ஹவுஸில் மிகப் பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற கொண்டாட்டத்தில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான், இலியானா, கிரிக்கெட் வீரர் ஜகீர் கான், மாதுரி தீட்ஷித், பரினீத்தி சோப்ரா, கரண் ஜோஹார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


Click it and Unblock the Notifications











