நிசமாவா.. பாகுபலியை இந்த பிரபலங்கள் எல்லாம் மிஸ் பண்ணாங்களா.. யார் யார் எந்த கேரக்டர்னு பாருங்க!

சென்னை: இந்திய திரையுலகை உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பாகுபலி படத்தை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி இருந்தார்.

Recommended Video

Baahubali completed 3 years | Prabhas | Rana Duggubati | Rajamouli

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

பாகுபலி 2ம் பாகம் வெளியாகி, இன்றுடன் 3 ஆண்டுகள் ஆவதை நடிகர் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா ஷர்மா மற்றும் பாகுபலி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ஹிரித்திக் ரோஷன் முதல் சோனம் கபூர் வரை பாகுபலி படத்தை மிஸ் செய்த பிரபலங்கள் குறித்து இங்கே காண்போம்.

பாலிவுட்டில்

பாலிவுட்டில்

தெலுங்கு திரையுலகில் நான் ஈ, மகதீரா என பல பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்த இயக்குநர் ராஜமவுலி, பாகுபலி படத்தை பாலிவுட் நட்சத்திரங்களை வைத்து இயக்க முதலில் ராஜமவுலி முடிவு செய்திருந்தார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை, நம்பிக்கையின்மை உள்ளிட்ட காரணங்களினால் பல முன்னணி பிரபலங்கள் பாகுபலியை மிஸ் செய்துள்ளனர்.

பாகுபலியாக ஹிரித்திக் ரோஷன்

பாகுபலியாக ஹிரித்திக் ரோஷன்

பாகுபலி கதாபாத்திரத்தில் அமரேந்திர பாகுபலி மற்றும் மகேந்திர பாகுபலி என நடிகர் பிரபாஸ் இரு வேடங்களில் நடித்து மிரட்டியிருந்த கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு முதலில் ராஜமவுலி அணுகியது பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனைத் தான் என்கின்றனர். ஜோதா அக்பர் படத்தில் நடித்திருந்த காரணத்தால் மீண்டுமொரு பீரியட் படம் வேண்டாம் என இந்த படத்தை ஹிரித்திக் ரிஜெக்ட் செய்தாராம்.

பல்வாள் தேவனாக ஜான் ஆபிரகாம்

பல்வாள் தேவனாக ஜான் ஆபிரகாம்

பாகுபலி ரோலில் ஹிரித்திக் ரோஷனை ஃபிக்ஸ் பண்ண திட்டமிட்டிருந்த ராஜமவுலி, பல்வாள் தேவன் ரோலுக்கு நடிகர் ஜான் ஆபிரகாமை கன்ஃபார்ம் செய்திருந்தாராம். ஆனால், பட்ஜெட் பிரச்சனை, நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுக்காதது உள்ளிட்ட பல பிரச்சனைகள் காரணமாக பாலிவுட் புராஜக்டை டிராப் செய்துள்ளார் ராஜமவுலி.

சிவகாமி தேவியாக ஸ்ரீதேவி

சிவகாமி தேவியாக ஸ்ரீதேவி

பாகுபலி எனும் மெகா பட்ஜெட்டில் முக்கியமான ரோலான சிவகாமி தேவி ரோலுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி தான் முதல் சாய்ஸ் ஆக இருந்துள்ளார். ஆனால், அதிக சம்பளம் கேட்டதாகவும், கதையில் தனது கதாபாத்திரத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் வெளிவராதது குறிப்பிடத்தக்கது.

அவந்திகாவாக சோனம் கபூர்

அவந்திகாவாக சோனம் கபூர்

பாலிவுட் நடிகை சோனம் கபூர், தமன்னா நடித்த அவந்திகா கதாபாத்திரத்திற்காக முதலில் அணுகப்பட்டதாகவும், கதையை படித்த சோனம் கபூர், கால்ஷீட் காரணமாக பிரம்மாண்ட பாகுபலியை மிஸ் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், அவந்திகா கதாபாத்திரமா? அல்லது தேவசேனா கதாபாத்திரமா? என்ற குழப்பமும் நீடிக்கிறது.

கட்டப்பாவாக மோகன் லால்

கட்டப்பாவாக மோகன் லால்

அமரேந்திர பாகுபலியின் மாமாவான கட்டப்பாவே அவரை கொல்லும் காட்சி தான் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பாக இருந்தது. 1800 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை பாகுபலி வசூல் செய்யவும் கட்டப்பா கதாபாத்திரம் இன்றியமையாததாக இருந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு சத்யராஜுக்கு முன்னதாக மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லாலை நடிக்க வைக்கவே ராஜமவுலி ஆசைப்பட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X