Don't Miss!
- News
‛ஆங்கிலேயர் அட்ராசிட்டினு’ ஏன் படம் எடுக்கல? பிபிசி ஆவணப்படத்தால் கொதித்த கேரளா ஆளுநர்.. ஆக்ரோஷம்!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அடுத்தடுத்து வீடுகளை விற்கும் பாலிவுட் பிரபலங்கள்..அதற்கு பின் இருக்கும் மாஸ்டர் பிளான்!
மும்பை : பாலிவுட்டில் பிரபல நட்சத்திரங்களான அக்ஷய் குமார், பிரியங்கா சோப்ரா, அமிதாப் பச்சன் என பலரும் தங்கள் பழைய வீடுகளை விற்று வருகின்றனர்.
திரைப்பிரபலங்கள் பலர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அதிக அளவில் வீடுகளை வாங்க குவிந்து வருகிறார்கள். பல கோடி ரூபாய் கொடுத்து ஆசை ஆசையாய் வாங்கும் வீட்டை உள் அலங்கார வேலை, வெளி அலங்கார வேலை அதற்கே பல கோடிகளை செலவு செய்கிறார்கள்.
ஆனால், சில பிரபலங்கள் விரும்பி வாங்கும் வீட்டை சில ஆண்டுகள் கழித்து அதிகவிலைக்கு விற்று விடுகின்றனர். வீடுகளை வாங்கி அடிக்கடி விற்கும் பிரபலங்களைப் பற்றி பார்க்கலாமா?
பாலிவுட்டில் மிரட்டப் போகும் துல்கர் சல்மான்.. வெறித்தனமான 'Chup' டிரைலர் ஆன் தி வே!

அக்ஷ்ய் குமார்
பாலிவுட்டில் பிரபல நடிகரான அக்ஷ்ய் குமார், மும்பை அந்தேரி வெஸ்ட் பகுதியில் உள்ள பிளாட்டை பாலிவுட் இசையமைப்பாளர் தபூ மாலிக் என்பவருக்கு ரூ.6 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இந்த பிளாட்டை அக்ஷய் குமார் 2017ஆம் ஆண்டு 4.12 கோடிக்கு வாங்கிய வீட்டை 5 ஆண்டுகள் கழித்து அவர் 6 கோடிக்கு விற்பனை செய்து உள்ளார். அந்த வீட்டை விற்று 1.88 கோடி லாபம் பார்த்துள்ளார்.

அமிதாப் பச்சன்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தாய், தந்தை வாழ்ந்த பரம்பரை வீட்டை விற்றுள்ளார். டெல்லி குல்மோஹர் பூங்கா அருகே அமைந்துள்ள சோபான் என்ற வீட்டை ₹23 கோடிக்கு தன்னுடைய நண்பர் ஒருவருக்கு விற்பனை செய்திருக்கிறார். தாய், தந்தை வாழ்ந்த வீட்டை திடீரென விற்றதற்கு என்ன காரணம் என சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் கேள்வியும் எழுப்பி இருந்தனர்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோர் தங்களது பெவர்லி ஹில்ஸ் வீட்டை 6.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றதாகவும், அதில் 5 படுக்கையறைகள், 4.5 குளியலறைகள் மற்றும் நீச்சல் குளம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கரிஷ்மா கபூர்
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தனது அபார்ட்மெண்ட் சில்வர் பிர்ச் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்றுள்ளார். பார்க் அவென்யூ கட்டிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை தனது அலுவலகமாக பயன்படுத்திய நிலையில் அதை 7 கோடிக்கு விற்றுள்ளார். அபார்ட்மெண்டின் சந்தை விலை 1.89 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.