சல்மான் கானுடன் நடித்த குட்டி பொண்ணா இது.. எப்படி நெடுநெடுன்னு வளந்து ஆளே மாறிவிட்டாரே!
மும்பை : பாலிவுட்டில் இன்றளவும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் சல்மான்கான் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான பஜ்ரங்கி பைஜான் கிட்டத்தட்ட நூறு கோடி வரை வசூலித்து இன்று வரை முன்னணியில் உள்ளது.
பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தில் சல்மான் கான் கதாபாத்திரம் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்ததோ அதிக அளவிற்கு அதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹர்ஷாலி மல்ஹோத்ராவும் பலரையும் கவர்ந்து சிறந்த நடிப்பிற்காக விருதுகளையும் வென்றார்.
இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து ரசித்த ஹர்ஷாலி மல்ஹோத்ரா இப்பொழுது நெடுநெடுவென வளர்ந்து பெரிய பெண்ணாக உள்ளார், இவரின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

பல வசூல் சாதனை
பாலிவுட் திரைத்துறையின் அசைக்க முடியாத பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இன்று வரை கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் சல்மான் கான் தனது ஒவ்வொரு திரைப்படங்களில் மூலமும் பல வசூல் சாதனைகளை செய்து பாலிவுட்டை மட்டுமல்லாமல் இந்திய திரைப்படத்துறையையே அலற விட்டு வருகிறார்.

1000 கோடி வசூல்
சல்மான்கான் திரைப்படங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பெரும் வரவேற்பை தொடர்ந்து பெற்று வரும் நிலையில் 2015ஆம் ஆண்டு வெளியான பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் உலக அளவில் கிட்டதட்ட 1000 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது.

அனைத்தும் தோல்வியடைந்த
பாகிஸ்தானில் வாழும் ஒரு குடும்பம் இந்தியாவிற்கு வந்த நிலையில் திரும்பி செல்லும்போது மகளை எதிர்பாராதவிதமாக இந்தியாவிலேயே தவறி விட்டுச் செல்ல, அந்தத் தாய் தனது மகளை திரும்ப பாகிஸ்தானுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அவை அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் இந்தியாவில் வசிக்கும் பவன் குமார் என்பவர் பல சிக்கல்களையும் தாண்டி அந்த குழந்தையை மீண்டும் தாயிடம் எப்படி ஒப்படைக்கிறார் என்பதே இந்தப்படத்தின் கதை.

பாசத்தோடு பிணைக்கப்பட்ட
சல்மான்கான் பவன் குமார் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்க, குழந்தை நட்சத்திரமாக ஹர்ஷாலி மல்ஹோத்ரா "முன்னி" என்ற கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் கரீனா கபூர் மற்றும் நவாசுதின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சல்மான்கான் மற்றும் ஹர்ஷாலி வரும் காட்சிகள் பலவும் நகைச்சுவையோடும் அதேசமயம் பாசத்தோடு பிணைக்கப்பட்டதாகவும் இருக்கின்ற நிலையில் அனைத்து வயதினரையும் மிக எளிதில் கவர்ந்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரின் கண்களிலும் நீர் வர வைத்தது.

நஸ்டிக்
ஹர்ஷாலி நடித்த முதல் திரைப்படத்திலேயே அனைவரையும் கவர்ந்து பல விருதுகளை வென்ற நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது "நஸ்டிக்" என்ற திரைப்படத்தில் நடித்து வர இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதே க்யூட்டுடன்
பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தில் முன்னி கதாபாத்திரத்தில் ஹர்ஷாலி வாய் பேசாத குழந்தையாக நடித்த அனைவரையும் கவர்ந்து இவர், இப்பொழுது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நெடுநெடுவென வளர்ந்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். எனினும் அப்போது பார்த்ததைப் போலவே இப்போதும் அதே க்யூட்டுடன் இருக்கும் ஹர்ஷாலியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் செம வைரலாகி வரும் நிலையில், மீண்டும் சல்மான் கான் உடன் நடிக்க விரும்புவதாக ஹர்ஷாலி சமீபத்தில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











