Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
செட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா!
மும்பை: பாலிவுட் சினிமாவில் நடிகைகள் செட்டில் பொண்டாட்டியை போன்று நடந்து கொள்ள வேண்டும் எதிர்பார்ப்பதாக நடிகை கங்கனா ரனாவத் விளாசியுள்ளார்.
சுஷாந்த் மரணம் அடைந்ததில் இருந்தே பாலிவுட்டின் முகத்திரையை கிழித்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத்.
ஆரம்பத்தில் பாலிவுட்டில் நெப்போடிசம் இருப்பதாகவும் வாரிசுகளே ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
கொஞ்சம் பிளாஷ்பேக்: அந்த காரணத்துக்காக, கமல் படத்தில் இருந்து திடீரென விலகிய பாலிவுட் ஹீரோயின்!

வாட்ஸ்அப் சாட்
அதனை தொடர்ந்து சுஷாந்துக்கு தெரியாமலேயே அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி அவருக்கு போதை மருந்துகளை கொடுத்த வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியானது. இது சுஷாந்த் ரசிகர்கள் மத்தியிலும் பாலிவுட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலர் சிக்குவார்கள்
அதன் பிறகு பாலிவுட்டில் போதை மருந்துகள் இல்லாமல் பார்ட்டியே நடக்காது என்றும் இதுதொடர்பாக விசாரணை நடத்தினால் முன்னணி நடிகர் நடிகைகள் பல சிக்குவார்கள் என்றும் குண்டை தூக்கி போட்டார். அவரது இந்த பேச்சு பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஸ்ட்டிங் கோச்
பிரபலங்கள் பலரும் கங்கனாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரத்தில் கங்கனா ரனாவத்தின் இந்த தைரியமான ஓபன் டாக்கிற்கு ஆதரவும் எழுந்தது. இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாலிவுட் சினிமாவில் உள்ள காஸ்ட்டிங் கோச், அட்ஜெஸ்ட்மென்ட்ஸ் குறித்து பேசி கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

படுக்கையை பகிர வேண்டும்
காஸ்டிங் கோச் பற்றி பேசிய கங்கனா ரனாவத், திரையுலகில் நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்றால் ஆண் நடிகர்கள் அல்லது திரைப்பட தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்களுடன் படுக்கையை பகிர வேண்டும். அப்படி செய்தால்தான் சினிமாத்துறையில் நட்சத்திரமாக ஜொலிக்க முடியும்.

மனைவியை போல்..
நான் சினிமா இன்டஸ்ட்ரிக்குள் வந்தபோது, பெண்கள் ஐட்டம் டான்ஸ்க்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள்.. ஆனால் உங்களைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர் இருக்க வேண்டும். ஹீரோயின்கள் ஷுட்டிங் செட்டில் மனைவிகளைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்றார்.

சுஷாந்தின் மரணத்திலிருந்து
மேலும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, 'இது எல்லாம் சுஷாந்தின் மரணத்திலிருந்து தொடங்கியது. இன்டஸ்ட்ரியில் இருப்பவராக நான் வெளிப்படுத்த வேண்டியது நிறைய இருந்தது...
Recommended Video

வழக்குகாக உதவினேன்
நான் போதைப்பொருள் மோசடியை அம்பலப்படுத்தியதால், மத்திய அரசிடமிருந்து பாதுகாப்பைக் கேட்டேன். இதனால் ஒரு பெண்ணாக பொது வெளியில் பிரச்சனைகளை சந்தித்தேன், ஆனால் நான் வழக்குக்கு மட்டுமே உதவி செய்தேன். இவ்வாறு நடிகை கங்கனா ரனாவத் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.