சுஷாந்த் சில ஆண்டுகளாக கஷ்டத்தில் இருந்தார்.. அவருக்கு யாரும் உதவவில்லை.. சாடும் பிரபலம்!

சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் கடந்த சில ஆண்டுகளாக ரொம்பவே கஷ்டப்பட்டு வந்தார் என்றும் அவருக்கு யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை என்றும் பாலிவுட்டின் பிரபல சிகை அலங்கார நிபுணரான சப்னா சாடியுள்ளார்.

Recommended Video

கண் கலங்கிய Reshma Sanjana | Sushant Singh is Very Positive Person

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியப்படி கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

34 வயதான சுஷாந்தின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளும் நபர் இல்லை அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

சுஷாந்த் சிங்கின் மேனேஜர் கடந்த வாரம் தற்கொலை செய்த நிலையில் சுஷாந்த் சிங் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மரணத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என பல கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம்?

மன அழுத்தம்?

சுஷாந்த் சிங் கடந்த 6 மாதங்களாக தீராத மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மரணமடைந்ததற்கு காரணம் மன அழுத்தமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணம் குறித்து பாலிவுட்டின் பிரபல சிகை அலங்கார நிபுணரான சப்னா பவாணி டிவிட்டியுள்ளார்.

யாரும் உதவவில்லை

யாரும் உதவவில்லை

அதில் கடந்த சில ஆண்டுகளாக சுஷாந்த் மிகவும் கஷ்டத்தில் இருந்தார் என்பது இரகசியமல்ல. தொழில்துறையில் யாரும் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை, அவர்கள் உதவி கரம் நீட்டவில்லை. இன்று ட்வீட் செய்வது என்பது தொழில் உண்மையில் எவ்வளவு ஆழமற்றது என்பதற்கான மிகப்பெரிய காட்சி. இங்கே யாரும் உங்கள் நண்பர் அல்ல என பதிவிட்டுள்ளார். மேலும் சுஷாந்த் மற்றும் தோனியுடன் எடுத்த போட்டோவையும் அவர் ஷேர் செய்துள்ளார்.

குடும்பத்தினர் வருகை

குடும்பத்தினர் வருகை

இதன் மூலம் தொழில் ரீதியாக சுஷாந்த் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது தெரிகிறது. சுஷாந்தின் மரணத்திற்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சுஷாந்தின் உடலை பெறுவதற்காக அவரது குடும்பத்தில் மும்பைக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X