அட்லீயை பார்த்து மெர்சலான ஷாருக்கான் - அடுத்த படத்துக்கு கதை ரெடி

சென்னை: அட்லீயின் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக சினிமா வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. இதற்காக ஒரு ஃபிரெஷ் மாஸ்ஸான ஆக்ஷன் திரைக்கதை ஒன்றை ஷாருக் கானுக்காக, அட்லீ வெகு நாட்களாக தயார் செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருந்தவர்களில் ஒருவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான்.

Bollywood Dan shah Rukh Khan Acts New Film Direct by Atlee

கிரிக்கெட் போட்டி அது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த மேட்சின் போது ஒரு கிளிக் ஒன்று நமது தமிழ் சினிமா உலகில் மிகவும் வைரலானது. அது நம் இயக்குநர் அட்லீ மற்றும் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் இருவரும் சேர்ந்து மேட்ச் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

அப்போது முதல் ஒரு கிசுகிசு சினிமா வட்டாரங்களுக்குள் வலம் வந்தவண்ணம் தான் இருக்கிறது. அதாவது அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கவுள்ளார் என்பது தான். அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தெறி அல்லது மெர்சல் திரைப்படங்களின் ரீமேக் திரைப்படங்களாக இருக்கக்கூடும் என ஒரு புறமும், அல்லது தளபதி விஜய் 63 திரைப்படம் என் தற்காலிகமாக பெயரிடப்பட்ட பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் பல வதந்திகள் பிறவி வந்த நிலையில் ஒரு புதிய தகவல் ஒன்று பாலிவுட் ஹங்காமா வட்டாரம் மூலம் கூறப்படுகிறது.

ஆனால், அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் எந்த ஒரு ரீமேக் படத்திலும் நடிக்க போவதில்லை. ஒரு ஃபிரெஷ் மாஸ்ஸான ஆக்ஷன் திரைக்கதை ஒன்றை ஷாருக் கானுக்காக, அட்லீ வெகு நாட்களாக தயார் செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக் கான் அட்லீயின் படங்களை மிகவும் ரசிப்பவர். அனைத்தும் சரியாக நடந்தால் ஷாருக் கான் இப்படத்தில் நடிக்க ஒப்புதல் அளிப்பார் என கூறப்படுகிறது. SRK புரோடக்ஷன்ஸ் சார்பில் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தின் ப்ராஜெக்ட் நிறைவேற்றப்பட்டால் இயக்குனர் அட்லீக்கு 30 கோடி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாலிவுட் ஹங்காமாவில் அலி அப்பாஸ் ஜாபர் தன்னுடைய ஸ்க்ரிப்ட்டிற்காக ஷாருக் கானிடம் பேசி வந்திருந்தார். ஆனால் சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அலி தற்போது சயிப் அலி கான் நடித்து வரும் தாண்டவ் வெப் சீரிஸ் பணியில் பிஸியாக இருக்கிறார்.

மறுபுறம் அட்லீ இயக்கியுள்ள பிகில் திரைப்படம் வெளியாக தயாராக இருக்கிறது. விஜய்-அட்லீ மறுபடியும் வேறு ஒரு படத்தில் டிசம்பர் மாதம் முதல் இணைய இருந்தார்கள் ஆனால் தற்போது அந்த திட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே அட்லீ டிசம்பர் மாதம் முதல் பிரீயாக இருக்க போகிறார்.

தொழில் துறை பார்வையாளரும், டிராக்கருமான ரமேஷ் பாலாவும் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார். ஷாருக்கானின் அடுத்த படம் அட்லீயைத் தவிர வேறு யாராலும் இயக்கப்படாது. டிசம்பர் முதல் பணிகள் தொடங்குகின்றன. அதிகாரபூர்வமான அறிவிப்பிற்காக காத்திருங்கள், என்று பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் செய்தியை உறுதிப்படுத்தினாலும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வந்த உடன் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X