Anurag Kashyap: தங்கலான் மாதிரியான விஷுவல்களை இந்தியில் பார்க்க முடியாது.. அனுராக் காஷ்யப் பாராட்டு!

சென்னை: பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருகிறார் அனுராக் காஷ்யப். இவர் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என்று பன்முகத் திறமைகளை கொண்டவராகவும் காணப்படுகிறார்.

பான்ச் என்ற படத்தின்மூலம் இவர் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் இந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை.

அனுராக் இயக்கத்தில் வெளியான ப்ளாக் பிரைடே என்ற படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு விருதுகளையும் படம் குவித்தது.

தங்கலான் படத்தை பாராட்டிய அனுராக் காஷ்யப்: பாலிவுட்டின் பிரபல இயக்குநராக உள்ள அனுராக் காஷ்யப், பான்ச் என்ற படத்தின்மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் இந்தப் படம் வெளியாகவில்லை. தொடர்ந்து பல அதிரடி படங்களை இவர் கொடுத்துள்ளார். பிளாக் ஃபிரைடே, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆப் வாசிப்பூர், ஷார்ட்ஸ் போன்ற படங்கள் இவரை பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக ரசிகர்களிடம் முன் நிறுத்தியது. தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் காட்டி வருகிறார் அனுராக்.

Bollywood Director Anurag Kashyap hails Vikrams Thangalaan movie and says that the movie inspires him a lot

1993ம் ஆண்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளை மையமாக கொண்டு வெளியான அனுராக் காஷ்யப்பின் பிளாக் பிரைடே, பல தேசிய விருதுகளை வென்றதுடன், அதிகமான சர்ச்சைகளிலும் சிக்கியது. இவரது இயக்கத்தில் உருவான கென்னடி என்ற படத்தில் நடிக்க நடிகர் விக்ரமை அணுகியதாகவும், அதற்காகவே படத்திற்கு அவரது செல்லப் பெயரை வைத்ததாக முன்னதாக தனது பேட்டியொன்றில் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்தார்.

இதையொட்டி தனது சமூக வலைதளத்தில் பேசிய நடிகர் விக்ரம், அந்தப் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய பழைய இமெயில் ஐடியையும் உபயோகத்தில் இல்லாத பழைய மொபைல் நம்பரில் அழைத்ததாகவும் அதனால்தான் தன்னை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தன்னுடைய பெயரில் வெளியாகவுள்ள அந்தப் படத்தை பார்க்க தான் மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் விக்ரம் தெரிவித்திருந்தார்.

தமிழிலும் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார் அனுராக் காஷ்யப். இந்தப் படம் அவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் தங்கலான் படத்தின் டீசரை பார்த்த தான் மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டதாகவும், இதுபோன்ற விஷவல்களை இந்தியில் பார்க்க முடியாது என்றும் அவர் பாராட்டியுள்ளார். இந்தியில் இதுபோன்ற காட்சிகளை எடுக்க பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற விஷயங்கள் தென்னிந்திய மொழிப் படங்களில் நடக்காது என்றும் கூறிய அனுராக், தான் எப்போதும் தென்னிந்திய மொழிப் படங்களை பார்ப்பதை தவிர்க்க மாட்டேன் என்றும் ஆனால் இந்தியில் வெளியாகும் படங்களை பார்ப்பதை அடிக்கடி தவிர்த்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகிவரும் தங்கலான் படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X