தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாகிறாரா பாலிவுட் இயக்குநர்?: லோகேஷ் என்ன சொல்லப் போறார்

மும்பை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 4 திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளன.

மாநாகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

லோகேஷ் யுனிவர்ஸ்

லோகேஷ் யுனிவர்ஸ்

முதல் படமான மாநகரம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ், அடுத்து இயக்கிய கைதி படத்தில் தரமான சம்பவம் செய்திருந்தார். கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதன்பின்னர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ், அடுத்து விக்ரம் திரைப்படத்தை கொடுத்தார். கைதி படத்தின் சீக்வெல்லாக உருவாகிய விக்ரம், அசுரத்தனமான வெற்றியை பதிவு செய்தது. 600 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள விக்ரம், திரையரங்குகளிலும் 100 நாட்களைக் கடந்தது.

பாராட்டிய அனுராக்

பாராட்டிய அனுராக்

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய் கைதி, விக்ரம் ஆகிய படங்களை அடுத்தடுத்து பார்த்து முடித்துள்ளார் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்தியில் தனித்துவமான இயக்குநராக வலம் வரும் அனுராக், 'கேங்ஸ் ஆஃப் வசீர்பூர்' போன்ற தரமான படங்களை கொடுத்துள்ளார். அதேபோல், தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டியிருந்தார். இந்நிலையில் கைதி, விக்ரம் படங்களைப் பார்த்த அனுராக் காஷ்யப், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜை வெகுவாகப் பாராட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிக்க விருப்பம்

நடிக்க விருப்பம்

கைதி, விக்ரம் படங்களின் மேக்கிங்கை பாராட்டியதோடு, லோகேஷின் யுனிவர்ஸில் இணையவும் விருப்பம் என அனுராக் காஷ்யப் கூறியுள்ளாராம். இதனை எதிர்பார்க்காத லோகேஷ் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் தற்போது தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் சஞ்சய் தத் உட்பட 6 பேர் விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அனுராக் காஷ்யப்பும் லோகேஷின் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் முடிவு?

லோகேஷ் முடிவு?

விஜய் 'வாரிசு' படத்தை முடித்ததும் லோகேஷ் இயக்கும் 'தளபதி 67'ல் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக சில மாதங்கள் வெயிட் பண்ணுங்க என விஜய் ரசிகர்களுக்கு லோகேஷ் அன்புக் கட்டளையிட்டுள்ளார். இந்நிலையில், தளபதி 67 படத்தில் அனுராக் காஷ்யப்பை லோகேஷ் கமிட் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சய் தத், கெளதம் மேனன், பிருத்விராஜ் ஆகியோர் விஜய்க்கு வில்லனாக நடிக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், அனுராக் காஷ்யப்பும் இணைந்தால் இன்னும் வில்லதனமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X