twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கர் அவார்டு கிடைக்குமா கிடைக்காதா?”: பாலிவுட் டைரக்டர் என்ன சொல்றார்?

    |

    மும்பை: ராஜமெளலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

    Recommended Video

    Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்திருந்தனர்.

    இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறுமா இல்லையா? என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கருத்து தெரிவித்துள்ளார்.

    உதவி செய்ய ஒரு மனசு வேணும்… ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு ராம்சரண் கொடுத்த சூப்பர் கிஃப்ட்!உதவி செய்ய ஒரு மனசு வேணும்… ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு ராம்சரண் கொடுத்த சூப்பர் கிஃப்ட்!

    ராஜமெளலியின் மல்டி ஸ்டார் பிரமாண்டம்

    ராஜமெளலியின் மல்டி ஸ்டார் பிரமாண்டம்

    பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர் ஆகியோர் நடிப்பில், ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் 2 பாகங்களும் பிரமாண்ட வெற்றிப் பெற்றன. அதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கியத் திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்.' ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

    கோடிகளை குவித்த ஆர்.ஆர்.ஆர்

    கோடிகளை குவித்த ஆர்.ஆர்.ஆர்

    கொரோனா பரவலால் 'ஆர்.ஆர்.ஆர்' படம் சொன்ன தேதியில் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே சென்றது. இறுதியாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு, ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. 'ஆர்.ஆர்.ஆர்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. 550 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஆர்.ஆர்.ஆர் உலகம் முழுவதும் வெளியாகி, சுமார் ஆயிரத்து நூறு கோடிகளை வசூலித்து வியக்க வைத்தது.

    ஓடிடியிலும் கலக்கும் ஆர் ஆர் ஆர்

    ஓடிடியிலும் கலக்கும் ஆர் ஆர் ஆர்

    திரையரங்குகளில் மாஸ் காட்டிய ஆர்.ஆர்.ஆர், திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளங்களிலும் வெளியானது. ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், ஜீ5 தளங்களில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படத்திற்கு, ஓடிடி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. 'பாகுபலி' படத்தை விடவும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு கிடைத்த வரவேற்பு,, ராஜமெளலியின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    ஆஸ்கர் விருதுக்கு தகுதியான ஆர்.ஆர்.ஆர்

    ஆஸ்கர் விருதுக்கு தகுதியான ஆர்.ஆர்.ஆர்

    இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கருத்து தெரிவித்துள்ளார். "அமெரிக்கா போன்ற நாடுகளில் மார்வெல் படங்களை விட RRR படத்தை வியந்து பார்ப்பதாகவும், இந்தியாவிலிருந்து ஆஸ்கார் நாமிஷேனுக்காக RRR தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக ஆஸ்கார் விருதை வெல்லும்" என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீர் ஃபைல்ஸ்க்கு விருது கிடையாது

    காஷ்மீர் ஃபைல்ஸ்க்கு விருது கிடையாது

    மேலும், "இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் நுழைவு படமாக RRR தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியா முதல் 5 ஆஸ்கார் நாமினேஷன்களில் ஒன்றாக இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் நாமினேஷனாக 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனுராக்கின் இந்த ஆருடம் பலிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    English summary
    Anurag Kashyap predicts Oscar nomination for RRR, hopes Kashmir Files isn’t picked as India’s official selection instead ( ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அதேபோல் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறாது எனவும் அவர் கூறியுள்ளார் )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X