பாலாவிடமிருந்து கை மாறிய கதை.. சசிக்குமார் இயக்கும் வெப் சீரிஸில் அனுராக் காஷ்யப் நடிக்கிறாரா?

சென்னை: சசிக்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வெப் சீரிஸில் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் விஜய்காந்த்தின் மகனான சண்முகபாண்டியனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சசிக்குமார். சேது, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிவிட்டு தனியாக படம் இயக்க திட்டமிட்டு கதையை உருவாக்கி சாந்தனுவிடம் கூறினார். ஆனால் அதில் அவர் நடிக்க விரும்பவில்லை. அதேபோல் படத்தை தயாரிக்கவும் எந்த கம்பெனியும் முன்வரவில்லை.

சசிக்குமார் களத்தில் இறங்கிய சுப்ரமணியபுரம்

சசிக்குமார் களத்தில் இறங்கிய சுப்ரமணியபுரம்

இதனையடுத்து ஜெய்யிடம் கதை சொல்லி ஓகே ஆனதை அடுத்து சுப்ரமணியபுரம் திரைப்படம் முதல் படியை தாண்டியது. ஆனால் யாரும் தயாரிக்க முன் வராததால் சசிக்குமாரே படத்தையும் தயாரித்தார். ஜெய்,சசிக்குமார், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு, ஸ்வாதி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு இந்தத் திரைப்படமானது வெளியானது.

மெகா ஹிட்டான சுப்ரமணியபுரம்

மெகா ஹிட்டான சுப்ரமணியபுரம்

மதுரையை மையமாக வைத்தும், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்துக்காக பலியாகும் இளைஞர்களை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. படத்தின் போஸ்டரை பார்த்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் படத்தை பார்த்து வாயடைத்துப்போனார்கள். அந்த அளவுக்கு சசிக்குமாரின் மேக்கிங் அட்டகாசமாக இருந்தது. சிறப்பான எமோஷனல், சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என பக்கா பேக்கேஜாக அமைந்தது சுப்ரமணியபுரம் திரைப்படம்.

ஈசனோடு ஒதுங்கிய சசிக்குமார்

ஈசனோடு ஒதுங்கிய சசிக்குமார்

முதல் படமே மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் என்ற பெயரை எடுத்த சசிக்குமார் அடுத்ததாக ஈசன் படத்தை இயக்கினார். அந்தப் படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்தப் படத்தோடு இயக்கத்திலிருந்து ஒதுங்கிவிட்டார் சசிக்குமார். அதன் பிறகு ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்திவரும் அவர் சமீபத்தில் அயோத்தி படத்தில் நடித்தார். மந்திரமூர்த்தி இயக்கியிருந்த அயோத்தி நல்ல வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் சசிக்குமார் மீண்டும் இயக்க வர வேண்டும் என ரசிகர்கள் நீண்ட வருடங்களாகவே கோரிக்கை வைத்துவருகின்றனர்.

மீண்டும் இயக்கத்தில் குதிக்கும் சசிக்குமார்

மீண்டும் இயக்கத்தில் குதிக்கும் சசிக்குமார்

இச்சூழலில் சசிக்குமார் மீண்டும் இயக்கத்தில் குதித்திருக்கிறார். ஆம், வேல ராமமூர்த்தி எழுதி பெரிதும் கவனம் ஈர்த்த குற்றப்பரம்பரை என்ற நாவலை அவர் வெப் சீரிஸாக எடுக்கப்போகிறார். இதனை முதலில் படமாக எடுப்பதற்கு இயக்குநர் பாலாவும், பாரதிராஜாவும் முயன்றார்கள். இதனால் அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் மோதல் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே அந்தத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனையடுத்து குற்றப்பரம்பரை நாவலை சசிக்குமார் வெப் சீரிஸாக எடுக்கவிருக்கிறார்.

சசிக்குமார் இயக்கத்தில் அனுராக் காஷ்யப்?

சசிக்குமார் இயக்கத்தில் அனுராக் காஷ்யப்?

இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சசிக்குமார் இயக்கும் வெப் சீரிஸில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றப்பரம்பரை வெப் சீரிஸில் விஜயகாந்த்தின் மகன் சண்முகப்பாண்டியன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X