பாலிவுட்டில் சூர்யா நடிக்கும் கர்ணா படம் கன்ஃபார்ம்தான்.. உறுதிப்படுத்திய இயக்குநர்!

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியுள்ள நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் சூர்யா இணைய உள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் பாலிவுட்டிலும் கர்ணா என்ற வரலாற்று திரைப்படத்தில் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டிருந்தது மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் உருவாக உள்ள இந்த படத்தில் அவருடன் ஜான்வி கபூர் ஜோடியாக இணைய உள்ளதாகவும் பிரபல பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தகவல்களை படத்தின் இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் உறுதி செய்துள்ளார்.

suriya

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்து சிறப்பான இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் படங்களையும் தயாரித்து வருகிறார். அவரது நடிப்பில் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள கங்குவா படம் வரும் நவம்பர் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக இந்த படம் தீபாவளி ரிலீசாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேட்டையன் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

சூர்யா -கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி: இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தின் சூட்டிங் அந்தமான், கேரளா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து சூர்யாவும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார் சூர்யா. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாலிவுட்டிலும் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் கர்ணா என்ற பிரம்மாண்டமான வரலாற்று படத்தில் நடிகர் சூர்யா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கர்ணா படம்: இந்த படத்தில் சூர்யாவுடன் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஜோடியாக இணையவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படம் ட்ராப்பானதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின. இதனிடையே, தற்போது இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருவதாகவும் படம் 100 சதவிகிதம் உருவாகவுள்ளதாகவும் ராகேஷ், சமீபத்தில் தான் பங்கேற்ற ஐஃபா விருது விழாவில் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் சூர்யா நடிப்பதும் 100 சதவிகிதம் உறுதியாகி உள்ளதாகவும் படம் 2 பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உறுதிப்படுத்திய இயக்குநர்: விரைவில் கர்ணா படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் அவர் உறுதி செய்துள்ளார். தற்போது மும்பையில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் சூர்யா செட்டில் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜோதிகாவும் அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் இணைந்து நடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சூர்யா நடிக்கவுள்ள பாலிவுட் படம் தற்போது உறுதியாகி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் அவர் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Read more about: suriya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X