விஜய், ரன்வீர் சிங் கூட்டணியில் அந்தமாதிரி ஒரு படம்… பாலிவுட் இயக்குநரின் வித்தியாசமான ஆசை!

மும்பை: இந்தியில் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள சர்க்கஸ் திரைப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 23ம் தேதி வெளியாகிறது.

ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டனர் இயக்குநர் ரோஹித் ஷெட்டியும் ரன்வீர் சிங்கும் தளபதி விஜய் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

சர்க்கஸ் ட்ரெய்லர் ரிலீஸ்

சர்க்கஸ் ட்ரெய்லர் ரிலீஸ்

இந்தியில் அடுத்தடுத்து வெளியான பல பிரம்மாண்டமான திரைப்படங்கள் பாய்காட் பிரச்சினைகளால் தடுமாறிய நிலையில், சமீபத்தில் ரிலீஸான பிரம்மாஸ்திரா உள்ளிட்ட படங்கள் வெற்றிப்பெற்றன. அதனைத் தொடர்ந்து ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'சர்க்கஸ்' திரைப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வரும் 23ம் தேதி வெளியாகிறது. ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள சர்க்கஸ் படத்தின் ட்ரெய்லர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரன்வீர் சிங்

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரன்வீர் சிங்

காமெடி ஜானரில் உருவாகியுள்ள சர்க்கஸ் திரைப்படம், வில்லியம் ஷேக்ஸ்பியரின் 'தி காமெடி ஆஃப் எரர்ஸ்' என்கிற நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஜானி லெவர், வருண் சர்மா, சஞ்சய் மிஸ்ரா போன்ற நட்சத்திர நடிகர்களும் இதில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற சர்க்கஸ் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ரன்வீர் சிங், விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம்

வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம்

தொடர்ந்து பேசிய ரன்வீர் சிங், விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியிருந்தார், அதுமட்டும் இல்லாமல் அந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கும் ரன்வீர் சிங் மேடையில் நடனமாடி மாஸ் காட்டினார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங், விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளது கோலிவுட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல், சர்க்கஸ் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ரோஹித் ஷெட்டியும் விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் - ரன்வீர் சிங் கூட்டணியில் புதிய படம்?

விஜய் - ரன்வீர் சிங் கூட்டணியில் புதிய படம்?

சர்க்கஸ் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் எந்த தென்னிந்திய நடிகரின் படத்தை இயக்க ஆசை என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் ரோஹித் ஷெட்டி, "விஜய், ரஜினிகாந்த், அஜித், சூர்யா, கார்த்தி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றார். மேலும் விஜய், ரன்வீர் சிங் இருவரும் சூப்பராக டான்ஸ் ஆடுவார்கள். அதனால் அவர்களை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசையுள்ளது எனவும் ரோஹித் ஷெட்டி கூறியுள்ளார். ஏற்கனவே ரன்வீர் சிங்கும் விஜய்யுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த நிலையில், ரோஹித் ஷெட்டியும் விஜய், ரன்வீர் சிங் படத்தை இயக்க ஆசை எனக் கூறியுள்ளது, இந்தக் கூட்டணி குறித்து எதிர்பார்க்க வைத்துள்ளது. .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X