நம்பவைத்து ஏமாற்றி பல கோடி மோசடி.. பிரபல இயக்குநர் கைது!
சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவர், மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை பிப்ரவரி 19 வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல இயக்குநர் மோசடி புகாரில் சிக்கி கைதாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநரான விக்ரம் பட் 'ராஸ்', 'குலாம்', 'ஃபுட்பாத்', '1920' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி உள்ளார். அதோடு மட்டுமில்லாமல், ஏராளமான திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இயக்குநர் விக்ரம் பட் மீதது உதய்பூரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு பாபல் என்பவர் ₹4 கோடி ரூபாயை மோசடி செய்ததாக உதய்பூரில் உள்ள கந்தா கர் காவல் நிலையத்தில் ஜனவரி 29 புகார் அளித்துள்ளார்.

இயக்குநர் கைது: அந்த புகார் மனுவில் மருத்துவமனை விரிவாக்கத்திற்காக ₹100 கோடி ரூபாய் கடனாக கொடுக்க மும்பையைச் சேர்ந்த ரமேஷ் சந்திரன் சிங் என்பவரை விக்ரம் பட் தனக்கு அறிமுகப்படுத்தினார். கடன் வழங்குவதற்கு முன்கூட்டியே செயலாக்கக் கட்டணமாக ₹4 கோடி ரூபாய் தருமாறு ரமேஷ் சந்திரன் சிங் என்னிடம் கேட்டார். இயக்குநல்ர விக்ரம் பட், ரமேஷ் சந்திரன் சிங் நம்பிக்மைக்குரியவர் என்று உறுதி அளித்ததை அடுத்து 4 கோடி தொகையை அவரிடம் கொடுத்தேன். ஆனால், அவர் உறுதி அளித்தபடி இதுநாள் வரை ₹100 கோடி ரூபாய் கடன் தொகை எனக்கு வரவில்லை. என்னை நம்ப வைத்து ஏமாற்றிய இயக்நர் விக்ரம் பட் மற்றும் ரமேஷ் சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
ஏமாற்றினார்: இவ்வழக்கு தொடர்பாக விக்ரம் பட் அண்மையில் அளித்த பேட்டியில், தான் நிரபராதி, நான் பணம் எதையும் அவர்களிடம் இருந்து பெறவில்லை. இது ஒரு தவறான புரிதல் என்றார். ஆனால், வழக்கு குறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் சோனி, ரமேஷ் சந்திரன் சிங் மற்றும் டாக்டர் ஹிமான்ஷு பாபல் இருவருக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி, பணத்தைச் செலுத்துமாறு மருத்துவரை சம்மதிக்க வைத்ததே இயக்குநர் விக்ரம் பட் தான் என்றும், டாக்டர் பாபல் செலுத்திய ₹4 கோடியில் ஒரு பகுதியை விக்ரம் பட் கமிஷனாக பெற்றார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இயக்குநர் விக்ரம் பட்டை நேற்று உதய்பூரில் கைது போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவரை பிப்ரவரி 19 வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தற்போது ரமேஷ் சந்திரன் சிங்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











