வீட்டுக்கே வராத தர்மேந்திரா.. மனசுக்குள் ஓடியதை எல்லாம் கொட்டிய ஹேம மாலினி.. இவ்வளவு நடந்திருக்கே!
மும்பை: தர்மேந்திராவின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படி இருக்கும்போது, அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இரண்டாவதாக நடிகை ஹேம மாலினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை ஹேம மாலினி தனது சுயசரிதையில் தனது இரண்டாவது திருமணம் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
தர்மேந்திரா மற்றும் ஹேம மாலினி என இவர்கள் இருவரும் படப்பிடிப்பின் போது காதலில் விழுந்தது உண்மைதான். அந்தக் காலகட்டத்தில் இது பெரும் சர்ச்சையாகவும் பேசப்பட்டது. ஹேமா மாலினியின் சுயசரிதை "Hema Malini: Beyond the Dream Girl" என்ற புத்தகத்தில் அவர் தர்மேந்திராவுடனான உறவு, திருமணம் மற்றும் அதன் பின்னரான வாழ்க்கை பற்றி மிகத் திறந்த மனதுடன் எழுதியிருக்கிறார். ஹேமாவின் தாயார் ஜெயா சக்கரவர்த்தி, தர்மேந்திரா ஏற்கனவே திருமணமானவர் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். "நடிகர் ஜிதேந்திரா உனக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவன், அவனைத் திருமணம் செய்துகொள்" என்று பலமுறை வற்புறுத்தி உள்ளார். ஆனால் ஹேம மாலினி, "என் மனதில் இடம் பிடித்தவர் தர்மேந்திரா ஒருவர்தான்" என்று உறுதியாக இருந்தார்.

இரண்டாவது திருமண்ம்: தர்மேந்திரா, தனது முதல் மனைவி பிரகாஷ் கவுரிடம் விவாகரத்து கேட்டார், ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்து சட்டப்படி இரண்டாவது திருமணம் சாத்தியமில்லாததால், இருவரும் 1979-இல் இஸ்லாமுக்கு மாறி 1980-இல் நிக்கா செய்து கொண்டனர். இது பற்றி ஹேமா எழுதும்போது, "அவர் எனக்காக இவ்வளவு பெரிய முடிவு எடுத்தது என்னை மிகவும் நெகிழ வைத்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏன் ஒரே வீட்டில்?: ஏன் ஒரே வீட்டில் வாழவில்லை என்ற கேள்விக்கும் அந்த புத்தக்கத்தில் பதில் அளித்துள்ளார். "நான் ஒருபோதும் யாருடைய வாழ்க்கையையும் சீர்குலைக்க விரும்பவில்லை. தர்ம்ஜி-யின் முதல் குடும்பம் அவருடன் இருக்கிறது, அவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். நான் அவர்கள் இடத்தில் நுழைந்து அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் எங்களை (என்னையும் என் மகள்களையும்) பார்க்க வரும்போது முழு அன்போடு வருகிறார். அது போதும், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பலரும் 'ஏன் ஒன்றாக வாழவில்லை?' என்று கேட்பார்கள். ஆனால் எனக்கு இந்த ஏற்பாடு வசதியாகவும் அமைதியாகவும் இருக்கிறது. நான் என் மகள்களை என் விருப்பப்படி வளர்க்கிறேன், என் நடனப் பள்ளி, என் அரசியல், என் பட வேலைகள் என எல்லாம் சுதந்திரமாக நடக்கிறது. தர்ம்ஜி எப்போது வந்தாலும் அவருக்கு ராஜாவைப் போல வரவேற்பு கொடுக்கிறோம்.

தைரியமான முடிவு: என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகத் தைரியமான முடிவு இதுதான். ஆனால் இன்று பார்க்கும்போது, ஒரு நொடி கூட வருத்தம் இல்லை. எனக்கு அழகான இரண்டு மகள்கள், அவர்களைப் பெருமைப்படுத்தும் தந்தை, என்னை என்றும் அன்பு செய்யும் கணவர்... இதைவிட நான் என்ன கேட்பேன்?" என்று எழுதி உள்ளார்.


Click it and Unblock the Notifications











