Don't Miss!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- News
மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுக்க போகிறது.. எங்கெல்லாம் தெரியுமா?
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கல்யாணத்துக்கு ரெடியான பாலிவுட் கிளாமர் குயின்: காதலரை கரம்பிடிக்க நல்லநாளும் குறிக்க போறாங்களாம்!
மும்பை: பாலிவுட் கவர்ச்சி கன்னியான கியாரா அத்வானி, தற்போது சங்கர் இயக்கத்தில் ராம் சரணுடன் நடித்து வருகிறார்.
கியாரா அத்வானியும், பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகின்றனர்.
இருவரும் பிரிந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், கியாரா அத்வானியின் பிறந்தநாளை சித்தார்த் மல்ஹோத்ரா பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.
மாட்டுக்கார
வேலனாக
மாறிய
மன்சூர்
அலிகான்..
என்னல்லாம்
பண்றாரு
பாருங்க!

தோனியின் மனைவியாக கியாரா அத்வானி
பாலிவுட் கிளாமர் குயின் கியாரா அத்வானியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் நடித்த முதல் படமான Fugly பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால், அதனைத் தொடர்ந்து அவர் நடித்திருந்த கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்காக வெளியான 'M.S Dhoni: The Untold Story' படத்தில், மெகா சிக்ஸர் அடித்து தனது கணக்கைத் தொடங்கினார். ஆம், இதில், தோனியின் மனைவி சாக்ஷி பாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார்.

கிளாமர் குயினின் சர்ச்சைகள்
உருக்கி எடுத்த ஒயிட் சாக்லேட் போல ஒய்யாரமாக நடைபோடும் கியாரா அத்வானி, பாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் கிளாமர் குயினாகவும் கொண்டாடப்படுகிறார். அவரை திரையில் பார்த்த யாரும் கிறங்காமல் இருக்க முடியாதபடி, அனைவரையும் தனது பார்வையாலேயே சுண்டி இழுத்துவிடும் மலாய் குல்ஃபி இந்த கியாரா அத்வானி. எந்தவிதமான கேரக்டர்களிலும் துணிந்து நடிக்கும் கியாரா, 'லஸ்ட் ஸ்டோரிஸ்' படத்தில் நடித்து, பயங்கர சர்ச்சையை கிளப்பினார்.

ராம் சரணுடன் ஆட்டம் போடும் கியாரா
பாலிவுட்டில் கியாரா அத்வானி நடித்த படங்கள் குறைவுதான் என்றாலும், இவரது தாராள மனம் டோலிவுட் வரை கொண்டு வந்துள்ளது. இயக்குநர் சங்கர் - ராம் சரண் கூட்டணியில் ஹீரோயினாக நடிக்கப் போவது "அவர்தான் இவர்தான்" என எல்லோரும் ஆளுக்கொருவரை கை காட்ட, சத்தமே இல்லாமல் அக்ரிமெண்டில் சைன் போட்டு, கெத்து காட்டினார் கியாரா அத்வானி. இதோ தற்போது ராம் சரணின் படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

சித்தார்த் மல்ஹோத்ராவுடன் காதல்
கவர்ச்சி, சர்ச்சை இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இதையெல்லாம் பேலன்ஸ் செய்வதற்காக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் கியாரா அத்வானிக்கு காதல் என கிசுகிசுக்கப்பட்டன. ஒருகட்டத்தில் இவர்களது காதல் கன்ஃபார்ம் ஆனது, கியாரா அத்வானியும் சித்தார்த் மல்ஹோத்ராவும் டேட்டிங் செல்வதையே தங்கள் டியூட்டியாக வைத்திருந்தனர்.

காதல் பிரேக் அப்
இந்நிலையில், இருவரது காதலும் திடீரென பிரேக்-அப் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டது. இது உண்மையென நம்பிய கியாராவின் ரசிகர்கள் 'அட இப்படி ஆகிப்போச்சே" என தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டனர். ரசிகர்களின் இந்த கவலையைப் போக்க, ஜூலை 31ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய கியாரா அத்வானிக்கு, துபாயில் செம்மையாக ட்ரீட் வைத்து அசத்திவிட்டார் சித்தார்த் மல்ஹோத்ரா.

விரைவில் திருமணம்
அதுமட்டும் இல்லாமல் பர்த்டே பார்ட்டி கொண்டாடிய கையோடு, துபாயில் இருந்து மும்பை திரும்பிய இந்த ஜோடி, சித்தார்த் மல்ஹோத்ரா வீட்டில் ரெஸ்ட் எடுத்துவருவதாக சொல்லப்படுகிறது. அதோடு கியாராவும் சித்தார்த்தும், இருவரது வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிகிறது. இதுபத்தி சீக்கிரமே அபிஸியல் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.