தமிழ், தெலுங்கு ஹீரோயின்கள் பற்றி அவர்களுக்கு தவறான எண்ணம் இருக்கிறது.. பாலிவுட்டை சாடும் நடிகை!

By

மும்பை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் நடிகைகள் பற்றி பாலிவுட்டில் தவறான எண்ணம் இருக்கிறது என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Recommended Video

இசையில்லாமல் நடனம்..அசத்தும் ஹீரோயின்..வியக்கும் ரசிகர்கள்! - வீடியோ

தமிழில், தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்துள்ளவர் பாயல் கோஷ். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஓசரவல்லி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ரிஷிகபூர், பரேஸ் ராவலுடன், படேல் கி பஞ்சாபி சாதி என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

தவறான எண்ணம்

தவறான எண்ணம்

கடந்த சில நாட்களுக்கு முன் மன அழுத்தம் பற்றி கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டில் இருந்து மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் பிரச்னை, மரண பயம். எதை கண்டாலும் பீதி. என் குடும்பத்தினர், நண்பர்கள் எனக்கு ஆறுதலாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் நடிகைகள் பற்றி பாலிவுட்டில் தவறான எண்ணம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தெய்வமாக பார்க்கிறார்கள்

தெய்வமாக பார்க்கிறார்கள்

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தேசிய விருது பெற்றுள்ள சில தென்னிந்திய இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளேன். அவர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். அவர்களுடனும் தென்னிந்திய ஹீரோக்களுடனும் பணிபுரியும்போது எனக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை. அவர்கள் ஹீரோயின்களை தெய்வமாகப் பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள்.

யாரிடமும் சொல்லாதே

யாரிடமும் சொல்லாதே

தமிழ்நாட்டில் சில நடிகைகளுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவர்களை வணங்குகிறார்கள். நான் இந்தி சினிமாவில் வாய்ப்புத் தேடியபோது, தென்னிந்திய படங்களில் நடித்ததை பற்றி யாரிடமும் சொல்லாதே என்று சிலர் சொன்னார்கள். தென்னிந்திய நடிகைகள் பற்றி, தவறான எண்ணம் இருக்கிறது அவர்களிடம். அது ஏன் என்று தெரியவில்லை.

பாலிவுட்டில் கவனம்

பாலிவுட்டில் கவனம்

தென்னிந்திய படங்களில் நடித்து ஏன் வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறாய், பாலிவுட்டில் கவனம் செலுத்து என்று இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். பாலிவுட்டில் கவனம் செலுத்துவதை விட தமிழ், தெலுங்கில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று இப்போது நினைக்கிறேன். பாலிவுட் சினிமா, இப்போது தென்னிந்திய படங்களைத்தான் நம்பி இருக்கின்றன. அங்கிருந்துதான் பல படங்கள் ரீமேக் செய்யப்படுகின்றன. இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X