விஜய் சேதுபதி வில்லன் இல்லையாமே..! அல்லு அர்ஜுனின் 'புஷ்பா'வில் வில்லனாகும் பிரபல இந்தி ஹீரோ!
சென்னை: அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் பிரபல இந்தி ஹீரோ வில்லனாக நடிப்பார் என்று தெரிகிறது.
Recommended Video
தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடித்து கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.
இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப், சமுத்திரகனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத் உட்பட பலர் நடித்துள்ளனர்.

2 வது இடம்
த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் ஊரடங்குக்கு முன்பு வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. தெலுங்கு சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்ட்டில் இந்தப் படம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்கிறார்கள். இதன் பாடல்கள் ஏற்கனவே மாஸ் ஹிட்டாகி இருந்த நிலையில், புட்ட பொம்மா என்ற பாடல் மெகா ஹிட்டானது.

ராஷ்மிகா மந்தனா
இதையடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். சுகுமார் இயக்குகிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தாடி மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில், இருக்கிறார், அல்லு அர்ஜூன். இந்த போஸ்டர், வெளியான அன்றே பரபரப்பானது.
டிவிட்டர் சாதனை
இந்தப் படம், செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் வன அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான 24 மணி நேரத்தில் 84 ஆயிரத்துக்கு அதிகமான லைக்ஸ்களை பெற்று, ட்விட்டரில் சாதனை படைத்தது.

நல்லம்மா ஹில்ஸ்
இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் நல்லம்மா ஹில்ஸ் பகுதியில் படமாக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே ஷூட்டிங் தொடங்கிய நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் வில்லனாக இந்தி ஹீரோ ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

சுனில் ஷெட்டி
பாலிவுட்டின் முன்னாள் ஹீரோக்கள் சுனில் ஷெட்டி அல்லது ஜாக்கி ஷெராப் ஆகியோரில் ஒருவர் இதில் வில்லனாக நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கொரோனா பிரச்னை முடிந்த பிறகு உறுதியாகத் தெரிய வரும் என்றும் படக்குழுத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











