Don't Miss!
- News
சென்சார் பூட்டு உடைப்பு..தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை..திருவெறும்பூரில் பகீர் சம்பவம்
- Lifestyle
உங்க பர்ப்யூம்கள் நீண்ட நேரம் உங்களை வாசனையாக உணர வைக்க இத பண்ணுங்க போதும்...!
- Finance
பட்ஜெட்-க்கு முன் வரும் பொருளாதார ஆய்வறிக்கை.. இது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா..?
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
ஷாருக்கானுக்கு விஜய் கொடுத்த டின்னர்.. ஷாருக் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?
மும்பை : நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் பதான் படம் வரும் 25ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ஜவான் படத்தின் சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது.
இந்தப் படம் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பதான் காவி பிகினி.. ஷாருக்கான், தீபிகா போஸ்டர்கள் கிழிப்பு... பஜ்ரங் தள் அமைப்பினர் ஆக்ரோஷம்

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷா என்று புகழப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பு பயணம் நீண்ட காலங்களாக தொடர்ந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறது. சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை பெற்ற இவர், அடுத்தடுத்த சிறப்பான வெற்றிப் படங்களை ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து கொடுத்து வருகிறார்.

அட்லீயுடன் இணைந்த ஷாருக்கான்
தமிழ்ப்பட இயக்குநர் அட்லீயுடன் ஷாருக்கான் கூட்டணி அமைத்து தற்போது ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படத்தின் இயக்குநர் அட்லீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் நயன்தாரா நாயகியாக இணைந்துள்ளார்.

25ம் தேதி ரிலீசாகும் பதான் படம்
இவரது பதான் திரைப்படம் வரும் 25ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாகியுள்ளார் தீபிகா படுகோன். பல்வேறு சர்ச்சைகளை இந்தப் படம் ரிலீசுக்கு முன்னதாகவே சந்தித்து வருகிறது. சமீப காலங்களில் பாலிவுட் படங்கள் எதிர்கொண்டு வரும் பாய்காட் பிரச்சினையை இந்தப் படமும் தற்போது சந்தித்து வருகிறது. மேலும் காவி உடை சர்ச்சையையும் எதிர்கொண்டுள்ளது.

ரசிகர்களுடன் உரையாடல்
இதனிடையே ட்விட்டர் மூலம் ஷாருக்கான் ரசிகர்களிடையே நேரிடையாக உரையாடியுள்ளார். ரசிகர்களின் கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை ஷாருக்கான் அளித்து அவர்களை கவர்ந்துள்ளார். தமிழிலும் ரஜினி, விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் குறித்து அவர் தன்னுடைய கமெண்ட்டை பதிவு செய்துள்ளார்.

ரஜினி குறித்த பதில்
நடிகர் ரஜினி குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான் பாஸ்மேன் என்று பதிலளித்துள்ளார். இதையடுத்து இந்த பதிலை ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்தனர். இதனிடையே விஜய் சேதுபதி குறித்த கேள்விக்கும் பதிலளித்த ஷாருக்கான், Awesome and Awesome என்று தெரிவித்துள்ளார்.

விஜய் குறித்து பேசிய ஷாருக்கான்
தொடர்ந்து நடிகர் விஜய் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாருக்கான், விஜய் ஸ்வீட் மற்றும் அமைதியானவர் என்றும், தான் சென்னை வந்தபோது தனக்கு சிறப்பான இரவு உணவு அளித்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன்னுடைய ஜவான் படத்தின் சூட்டிங்கிற்காக சென்னை வந்த ஷாருக்கான் அட்லீயுடன் இணைந்து விஜய்யை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.