அட்லீயின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்.. என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

மும்பை : பிரபல இயக்குநர் அட்லீ -பிரியா தம்பதிக்கு சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததை இந்தத் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

தற்போது பாலிவுட்டில் ஷாருக்கை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார் இயக்குநர் அட்லீ. வரும் ஏப்ரல் மாதத்தில் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

 நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான்


நடிகர் ஷாருக்கான் -தீபிகா படுகோனே உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது பதான் படம். இந்தப் படம் வெளியாகி 8 நாட்களிலேயே 600 கோடி ரூபாய்க்கும் மேலாக சர்வதேச அளவில் வசூலித்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான்

ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான்

இந்தப் படத்தையொட்டி நடிகர் ஷாருக்கான் ரசிகர்களை தொடர்ந்து பார்த்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது வீட்டின் முன்பாக ஏராளமான ரசிகர்கள் திரண்டு, பதான் படத்தின் சக்சசை அவருடன் பகிர்ந்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது தன்னுடைய வீட்டின் பால்கனியில் இருந்து அவர் ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார்.

ரசிகர்களுடன் உரையாடல்

ரசிகர்களுடன் உரையாடல்

இதையடுத்து ட்விட்டர் பக்கத்தில் ஷாருக்கான் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவர், இயக்குநர் அட்லீயின் குழந்தை குறித்த கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஷாருக்கான், he is too sweet என்றும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் பதிலளித்துள்ளார்.

அட்லீ -பிரியா தம்பதிக்கு ஆண்குழந்தை

அட்லீ -பிரியா தம்பதிக்கு ஆண்குழந்தை

அட்லீயின் மனைவி பிரியா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 31ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர்கள் இருவரும் இணைந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்டனர். இந்நிலையில், ஷாருக்கான், அந்தக் குழந்தை குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

ஜவான் படம்

ஜவான் படம்

இயக்குநர் அட்லீ, ராஜா ராணி மற்றும் விஜய்யுடன், தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில், தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கான் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகியுள்ள பதான் படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்துள்ள நிலையில், இந்தப் படம் வெறும் டீசர்தான் என்றும் மெயின் பிக்சர், ஜவான் ரிலீசாக உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X