இதுவரை நான் நடிக்காத கேரக்டர்.. அட்லி படம் குறித்து மெய்சிலிர்த்த ஷாருக்கான்!
மும்பை : விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கி சிறப்பான இயக்குநராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் இயக்குநர் அட்லி.
தற்போது நடிகர் ஷாருக்கானின் அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளம் மூலம் பதிலளித்த நடிகர் ஷாருக்கான் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் அட்லி
நடிகர் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி. ஆர்யா -நயன்தாராவின் ராஜா ராணி படத்தின்மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தார். எங்கோ பார்த்தது போன்ற கதையாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை மிரட்டலாக அமைந்தது.

ராஜா ராணி படம்
விருப்பமில்லாமல் திருமணம் செய்யும் இருவர் மற்றும் அவர்கள் வாழ்க்கைப் பாதையில் அவர்கள் சந்திக்கும் அடுத்தடுத்த திருப்பங்களை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. இதையடுத்து விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

விஜய்யின் அடுத்தடுத்த படங்கள்
தெறி, மெர்சல், பிகில் என விஜய்யின் அடுத்தடுத்தப் படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார். விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். மூன்று படங்களுமே விஜய்யை சிறப்பாக ரசிகர்களுக்கு காட்டியது. இந்தப் படங்களின் வெற்றி அட்லியை இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக மாற்றியுள்ளது.

ஷாருக்கானின் ஜவான் படம்
தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கி வருகிறார் அட்லி. படத்திற்கு சமீபத்தில் ஜவான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான், இதுவரை தான் ஜவான் போன்ற படங்களில் நடித்ததில்லை என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

அட்லியுடன் சிறப்பான கெமிஸ்ட்ரி
அட்லியின் முந்தைய படங்கள் மாஸ் கமர்சியல் படங்கள் என்பதை சுட்டிக் காட்டிய ஷாருக்கான், தனக்கும் அட்லிக்கும் சிறப்பான கெமிஸ்ட்ரி காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். படத்தில் தான் சிலவற்றை கொண்டு வருவதாகவும் அட்லி சிலவற்றை கொண்டு வருவதாகவும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான நயன்தாரா
படத்தில் நயன்தாராவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற படத்தில் தான் நடிப்பதை பெருமையாக உணர்வதாகவும் அவர் மேலும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video

30 ஆண்டு திரையுலகப் பயணம்
திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான். இதையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் ஜவான் படம், அட்லி மற்றும் சல்மான் கான் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











