நான் எப்பவுமே விஜய்யோட தீவிர ரசிகன்... சொன்ன பாலிவுட் சூப்பர் ஹீரோ!
மும்பை : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் சர்வதேச அளவில் வரும் 13ம் தேதி ரிலீசாக உள்ளது. இன்னும் சில தினங்களே ரிலீசுக்கு உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் நாட்களை எண்ணி வருகின்றனர். இடையில் இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அவர்களது உற்சாகம் கட்டுக்கடங்காமல் உள்ளது.

விஜய்யின் பீஸ்ட்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். மாஸ்டர் படத்தில் வாத்தியாராக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் விஜய், இந்தப் படத்தில் ரா ஏஜெண்டாக நடித்துள்ளார். வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ட்ரெயிலர் வெளியீடு
படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் என அடுத்தடுத்து ரசிகர்களை என்கேஜ் செய்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் படத்தின் ட்ரெயிலர் ரிலீசான நிலையில், அந்த 2.48 நிமிட ட்ரெயிலரை திரையரங்குகளில் சென்று பார்த்தனர்.

5 மொழிகளில் ரிலீஸ்
கடந்த 2ம் தேதி படத்தின் தமிழ் ட்ரெயிலர் வெளியானது. படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 இந்திய மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இந்தி ட்ரெயிலர் நேற்றைய தினம் வெளியானது. இதனை பாலிவுட்டின் முன்னணி ஹீரோ வருண் தவான் வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் தீவிர ரசிகன்
மேலும் படத்தின் இந்த ட்ரெயிலர் வலிமையாகவும் டெரராகவும் மற்றும் நெருப்பாகவும் உணர வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் எப்போதுமே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்றும் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியில் ரா என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது.

இந்தியில் ட்ரெயிலர்
தற்போது இந்தியிலும் இந்த ட்ரெயிலர் ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் அதிகமான திரையரங்குகளில் படம் ரிலீசாக உள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் தெலுங்கு ட்ரெயிலர் ரிலீசாக உள்ளது. முன்னதாக தெலுங்கு, கன்னட ரசிகர்கள் படத்தின் தமிழ் ட்ரெயிலருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











