twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை” ஏ.ஆர். ரஹ்மானுக்கு வைரமுத்து ஆறுதல்!

    |

    சென்னை: பாலிவுட்டில் தன்னை ஒழிக்க ஒரு கூட்டமே செயல்பட்டு வருவதாக சமீபத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூறியிருந்தது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

    Recommended Video

    ஒரு ஆண்டுக்கு ஊரடங்கு | Vairamuthu Latest கவிதை | கவிப்பேரரசு வைரமுத்து

    இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானுடன் 30 ஆண்டுகாலமாக நட்பாக பழகி வரும் பாடலாசிரியர் வைரமுத்து, ஆறுதல் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    மேலும், ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாகவும், பாலிவுட்டில் தலைவிரித்தாடும் நெப்போடிசத்தை கண்டித்தும், ஏகப்பட்ட ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சரி பாதியாக

    சரி பாதியாக

    தமிழில் பல படங்களுக்கு சூப்பர் ஹிட் இசையை கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட்டிலும் டாப் இசையமைப்பாளராக பிரபலமானார். ஆனால், சமீப காலமாக, இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், ஏ.ஆர். ரஹ்மானை தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதில்லை. இதனால், அவரது பாலிவுட் படங்களின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து விட்டது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    பாலிவுட்டில் வெளியாட்களை வளர விடக் கூடாது என்ற மனநிலையில் ஒரு பெரிய மாஃபியா கூட்டமே செயல்பட்டு வருவதாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து ஒரு பெரிய சர்ச்சையே வெடித்து வருகிறது. கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர், நெப்போடிசம் குறித்து வெளிப்படையாக பேசி வரும் நிலையில், ஏ.ஆர். ரஹ்மானும் பாலிவுட்டில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்துக் கூறியுள்ளார்.

    30 வருடங்கள்

    30 வருடங்கள்

    1992ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக ரஹ்மான் அறிமுகமானார். அந்த படம் முதல், பல படங்களுக்கு ரஹ்மான் இசைக்கு பாடல்களை எழுதி கொடுத்துள்ளார் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து. இந்நிலையில், ரஹ்மானுக்கு பாலிவுட்டில் இழைக்கப்பட்ட அநீதி குறித்து அறிந்த அவர், ஆறுதல் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

    வைரமுத்து கவிதை

    வைரமுத்து கவிதை

    " அன்பு ரகுமான்!

    அஞ்சற்க.

    வட இந்தியக் கலையுலகம்

    தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு

    ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.

    இரண்டுக்கும் உயிர்வாழும்

    எடுத்துக்காட்டுகள் உண்டு.

    ரகுமான்! நீங்கள் ஆண்மான்;

    அரிய வகை மான்.

    உங்கள் எல்லை

    வடக்கில் மட்டும் இல்லை." என வைரமுத்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    பெண்களுக்கு மட்டும்

    பெண்களுக்கு மட்டும்

    ஸ்ரீதேவி, ஹேமா மாலினி என தென்னிந்தியாவில் இருந்து வட இந்தியாவுக்கு சென்ற பல நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு, பாலிவுட்டில் தென்னிந்தியாவில் இருந்து போகும் எந்தவொரு ஆண் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி பல தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட்டில் கோலோச்ச முடியாமல் போவதற்கு நெப்போடிசம் தான் காரணம் என்பதை வைரமுத்து மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

    வடக்கில் மட்டும் இல்லை

    வடக்கில் மட்டும் இல்லை

    மேலும், ஏ.ஆர். ரஹ்மானின் திறமை உலகம் முழுவதும் பரவி கிடைக்கிறது. வடக்கில் மட்டும் உங்கள் எல்லை இல்லை. நீங்கள் ஒரு அரிய வகை மான் என வைரமுத்து வார்த்தை நடையிலும், வாழ்க்கை நடையிலும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த கவிதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரமுத்துவின் ஆதரவுக்கு பல ரஹ்மான் ரசிகர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Vairamuthu penned a strengthening poem for AR Rahman on Bollywood nepotism row. Vairamuthu also slammed bollywood, only gave importance to Southern females not males in his poem.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X