Dhanush: தனுஷ் தங்கமானவர் எல்லாம் இல்லை.. கேவலமா நடத்துனாரு.. பிரபலம் சொன்ன அதிர்ச்சி சம்பவம்!
சென்னை: நேற்று அதாவது ஜூலை 10ஆம் தேதி தான் தனுஷின் 54 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த நயன் தீப் ரக்ஷத் என்ற பிரபல சினிமா பத்திரிகையாளர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், தனுஷ் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவலகளைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது அந்த பேட்டியில், " தனுஷ், கஜோல் இணைந்து நடித்த வி.ஐ.பி 2 படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாக படம் குறித்த பேட்டி எடுக்க தனுஷைச் சந்தித்தேன். தனுஷின் பி.ஆர். என்னை தனுஷ்க்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவே இல்லை. கஜோல் உடன் இணைந்து நடித்தது குறித்து உங்கள் அனுபவம் என்ன என்று கேட்டேன், அதற்கு அவர், அதை கஜோலிடம் கேளுங்கள் என்று மிகவும் கோபமாக பதில் அளித்தார்.
இந்த பேட்டிக்கு நடுவே ஒருவர் தனுஷ்க்கும் எனக்கும் ஜூஸ் கொடுக்க வந்திருந்தார். அந்த ஜூஸ் கொடுக்கும் நபரை தனுஷ் மிகவும் கேவலமாக நடத்தினார். என்னால், அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனுஷ் பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால், சூப்பர் ஸ்டாருக்கான தகுதிகள் என்பது நீங்கள் சக மனிதர்களை எப்படி கண்ணியத்தோடு நடத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து தான். குறிப்பாக சமூகத்தில் உங்களை விடவும் மிகவும் கீழ்நிலையில் உள்ளவர்களான, உங்களது மேனேஜர், பி.ஆர், ஜூஸ் கொடுக்க வந்த அந்த நபர் உள்ளிட்டவர்களை எப்படி மரியாதையாக நடத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து தான்.
மேனேஜர் பார்த்துவிட்ட வேலை: நான் அந்த பேட்டியில் சுச்சி லீக்ஸ் தொடர்பாக கேள்வி கேட்க நினைத்து கேள்விப் பட்டியலில் சேர்த்திருந்தேன். ஆனால் அவரது மேனேஜர் இதுபோன்ற கேள்விகளைக் கேட்க வேண்டாம் எனக் கூறியதால் நான் அந்த கேள்விகளை நீக்கிவிட்டேன். தனுஷ் குறித்து அவ்வப்போது வரும் அவருக்கு அவதூறுகளை பெற்றுக் கொடுக்கும் தகவல்களை அவரது குடும்பம் எப்படி கையாளுகிறது என்று கேட்டதற்கு மிகவும் நேர்த்தியாக பதில் அளித்தார்.
தனுஷ் அப்செட்: பேட்டி முடிந்த பின்னர், அவரது பி.ஆர் வந்தார். அவரைப் பார்த்து இந்த பேட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்னு நீ தானே சொன்னாய் எனக் கேட்டார். உடனே நான் ஏன் சார் பிடிக்கவில்லையா என்று கேட்டேன். அதற்கு உடனே நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் இந்த படத்தை புரோமோட் செய்யத்தான் உங்களுக்கு பேட்டி தருகிறோம். ஆனால் படம் குறித்து நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்று கூறினார்.

நயன்தாரா: நான் படம் குறித்த கேள்விகளுடன் தான் உங்களிடம் வந்தேன். ஆனால் உங்களது மேனேஜர் தான் நான் என்னென்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று நான் கொண்டு வந்த கேள்விகளில் இருந்து தேர்வு செய்தார் என்று கூறினேன் என்று கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் இவர் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர் எனவும், நயன் - தனுஷ் இடையே பிரச்னை ஏற்பட்ட போது நயன்தாராவின் பதிவுக்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளார். எனவே இவர் வேண்டுமென்றே தனுஷ்க்கு எதிராக பேசியுள்ளார் எனவும் தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











