சக்திமான் முகேஷ் கண்ணாவுக்காக தர்மேந்திரா போட்ட சண்டை.. யப்பா செம கோபக்காரரா இருந்திருக்காரே!

மும்பை: பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். சிகிச்சை பெற்று எப்படியாவது மீண்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் இரங்கல் தெரிவித்தது. மும்பையில் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்ட சூழலில்; சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா தனியார் ஊடகம் ஒன்றுக்கு மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் தர்மேந்திரா. ஷோலே, அனுபமா, சீதா அவுர் கீதா என பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். மொத்தம் 300க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களி நடித்து கலக்கிய அவர் முதலில் பிரகாச் கவுர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமண வாழ்க்கை நல்லபடியாக போய்க்கொண்டிருந்தபோதே நடிகை ஹேமமாலினி மீதும் காதல் மலர்ந்தது. எனவே 1980ஆம் ஆண்டு அவரையும் திருமணம் செய்துகொண்டார்.

உடல்நல குறைவு: தர்மேந்திராவின் மகன்களாக சன்னி தியோலும், பாபி தியோலும் ஃபேமஸான நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி விஜேதா, இஷா, அஹானா, அஜீதா என நான்கு மகள்களும் இருக்கிறார்கள். வயோதிகம் காரணமாக ஓய்வில் இருந்த அவருக்கு சமீபமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தார்கள். எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என்று குடும்பத்தினரும், ரசிகர்களும் நம்பினார்கள்.

Bollywood Legend Dharmendra Passes Away Mukesh Khanna Shares Emotional Memories
Photo Credit:

உயிரிழந்த தர்மேந்திரா: ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மும்பையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் இரங்கல் தெரிவித்தது. திரைத்துறையினரும், ரசிகர்களும் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி முடித்த பிறகு மும்பையில் இருக்கும் பவன் ஹான்ஸ் தகன மேடையில் நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் தர்மேந்திரா பற்றி எமோஷனலாக பேசியிருக்கிறார் சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா.

முகேஷ் கண்ணா பேட்டி: அவர் தனியார் ஊடகமான ஏசியாநெட்டுக்கு அளித்த பேட்டியில், "தர்மேந்திரா முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டிருந்தாலும் மக்களிடம் நன்றாக நடந்துகொள்வார். அதை பார்த்துதான் நானும் கற்றுக்கொண்டேன். அவருடன் ஐந்து படங்கள்வரை பணியாற்றியிருக்கிறேன். அவருடன் பணியாற்றியபோது நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதாவது ஒருமுறை எனது காலில் காயம் பட்டுவிட்டது. எனவே என்னுடைய காலை எடுத்து தேனீக்களின் குவியலில் வைத்திருந்தேன். அதை பார்த்த தர்மேந்திரா இவருக்கு ஒரு கால் இல்லை என்று சொன்னார். பிறகு சரியானது.

சண்டை போட்ட தர்மேந்திரா: அந்தப் படத்தில் நடித்து முடித்தபோது எனது கால் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கண் விழித்து பார்த்தபோது அவர் அங்கு எனக்காக சண்டை போட்டுக்கொண்டிருந்தார். உடனே நான், நீங்கள் என்ன செய்கிறீர்கள். நான் முக்கியமில்லை எனது வேலைதான் முக்கியம் என்றேன். அதற்கு அவரோ, 'மேஜர் உங்களை தனியாக விடமுடியாது' என திட்டவட்டமாக கூறினார். பிறகு அவரை எப்படியோ சமாதானம் செய்தேன். அவர் ரொம்பவே நேர்மையானவர், நல்லவர். அவருக்கு மக்கள் ஏகப்பட்ட அன்பை கொடுத்தார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X