Dadasaheb Phalke Award: பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

மும்பை: பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவின் பொற்காலத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் வஹீதா ரெஹ்மான். இவர் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தார்.

இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த இவரின் தந்தை மாவட்ட நீதிபதி ஆவார்.

Bollywood legend Waheeda Rehman will receive the Dadasaheb Phalke Award for 2021

நடிகை வஹீதா ரஹ்மான்: மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்த இவருக்கு சூழ்நிலை ஒத்துழைக்காததால் நடிகையாக மாறினார். 1955 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் ரோஜுலு மராயி என்ற படத்தில் துணைநடிகையாக அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு நடிகையாக கொண்டாடப்பட்ட நிலையில், அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்கள் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

அனைத்து மொழியிலும்: அதன் பிறகு தெலுங்கு, தமிழ்,மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி அனைத்து மொழிகளிலும் கொடி கட்டிப் பறந்தார். இவர் 1974 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு பெங்களூரிலுள்ள பண்ணை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இவருக்கு ஷோஹைல் மற்றும் கஷ்வி என்ற பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் நோய்வாய்ப்பட்டு இருந்ததை அடுத்து, மும்பை பாந்த்ராவிலுள்ள தனது கடற்கரை பங்களாவில் தற்போது வசித்து வருகிறார்.

Bollywood legend Waheeda Rehman will receive the Dadasaheb Phalke Award for 2021

தாதா சாகேப் பால்கே விருது: 85 வயதான இவர் கடைசியாக 2018ம் ஆண்டு கமல் இயக்கத்தில் உருவான விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பிலிம்பேர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை பெற்றுள்ள வஹீதா ரஹ்மானுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி இணையத்தில் பரவியதும் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தாதா சாகேப் பால்கே விருது: இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன், கன்னட நடிகர் ராஜ்குமார், மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர், ரஜினிகாந்த் ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X