twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா.. மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் பாலிவுட்.. அந்தக் காட்சிகளுக்கு கட்!

    |

    சென்னை: கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க பாலிவுட் முடிவு செய்துள்ளது.

    உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவையும் பதம் பார்த்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்புவதற்காக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் சினிமா உட்பட அனைத்து தொழில் துறைகளும் முடங்கியுள்ளது.

    மேனேஜரை விரட்டிய விஜய்.. என்ன மேட்டருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!மேனேஜரை விரட்டிய விஜய்.. என்ன மேட்டருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    சின்னத்திரை படப்பிடிப்பு

    சின்னத்திரை படப்பிடிப்பு

    இந்நிலையில் சில மாநிலங்களில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அந்தந்த மாநில அரசுகள், கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் தமிழகம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் சினிமா படப்பிடிப்பை தொடங்க பாலிவுட் சினிமாவும் தயாராகியுள்ளது.

    மிகக்குறைந்த அளவில்

    மிகக்குறைந்த அளவில்

    இந்திய தயாரிப்பாளர்கள் கில்ட் வழங்கிய கொரோனா வைரஸ் வழிகாட்டுதலின் அடிப்படையில் அடுத்த சில வாரங்களில் பாலிவுட் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளது. கோவிட் -19 நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் படப்பிடிப்பு மிக குறைவான அளவில் மிகக் குறைந்த அளவு தொழிலாளர்கள் எண்ணிக்கையுடன் நடைபெறும் என தெரிகிறது.

    முத்தக்காட்சிகள் இருக்காது

    முத்தக்காட்சிகள் இருக்காது

    குறிப்பாக டூயட் பாடல், நடன காட்சிகள் மற்றும் ஏராளமான கூட்டங்கள் நிறைந்த செழிப்பான திருமண காட்சிகள் உள்ளிட்டவை தற்போது தொடங்கவுள்ள படப்பிடிப்பில் இருக்காது. ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழுவைக்காட்டிலும் குறைவாக இருக்கும் என தெரிகிறது. செட்டில் ஹேண்ட்ஷேக்குகள் அல்லது கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது போன்றவையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாலிவுட்டின் தாயகம்

    பாலிவுட்டின் தாயகம்

    சுமார் 300,000 தொழிலாளர்களைப் பயன்படுத்தும் கில்ட்டின் கடுமையான வழிகாட்டுதல்களில் பாலிவுட்டின் தாயகமான மும்பையில் சுமார் 42,000 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மகாராஷ்டிராவின் தலைநகராகும், இது இந்தியாவின் மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாகும். மகாராஷ்டிராவில் 75,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இது நாட்டின் மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகும்.

    பொழுது போக்குகள்

    பொழுது போக்குகள்

    கடந்த மூன்று மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்த நிலையில், உலகின் இரண்டாவது பெரிய திரைப்படத் துறை வேலைக்குத் திரும்ப ஆர்வமாக உள்ளது. திரைப்படங்களும் கிரிக்கெட்டும்தான், இந்தியாவின் இரண்டு மிகப் பெரிய பொழுது போக்குகள். லாக்டவுன் விதிகள் படிப்படியாக தளர்த்தப்படுவதால் நாடு முழுவதும் ஆர்வத்துடன் பதட்டமும் இணைந்துள்ளது.

    கூட்டமான காட்சிகள்

    கூட்டமான காட்சிகள்

    ஆண்டுக்கு 2.28 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டும் பாலிவுட்டில் ஆண்டுக்கு 2,000 திரைப்படங்களை வழக்கமாக ரிலீஸ் ஆகும். இந்நிலையில் தற்போது தொடங்கும் சில படங்களில் நெருக்கமான மற்றும் கூட்டமான காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

    இயக்குநர்கள்..

    இயக்குநர்கள்..

    65 வயதுக்கு மேற்பட்ட எந்த நடிகரையும் படப்பிடிப்பில் பயன்படுத்த அனுமதியில்லை. இது 77 வயதான அமிதாப் பச்சன் மற்றும் 69 வயதான ஷபனா ஆஸ்மி போன்ற சிறந்த நடிகர்கள் நிராரகரிக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற இயக்குநர்கள் ஏராளமானவர்கள் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிலேயே உள்ளனர்.

    அந்நியர்களுடன் தொடர்பு..

    அந்நியர்களுடன் தொடர்பு..

    அதோபோல் படப்பிடிப்பை பார்க்க பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது. எந்த நேரத்திலும் மூன்றில் ஒரு பங்கு குழுவினர் மட்டுமே செட்டில் அனுமதிக்கப்படுவார்கள். குடும்பங்களைப் பற்றிய கதைகளில், நடிகர்கள் இயக்குநர்கள் அந்நியர்களிடையே தொடர்பைக் குறைக்க உண்மையான குடும்பங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும்.

    உணவு வழங்கப்படாது

    உணவு வழங்கப்படாது

    நடிகர்கள் தங்களின் மேக்கப்பை வீட்டிலேயே செய்துகொண்டு வர வேண்டும். அது முடியாவிட்டால், பாதுகாப்பு ஆடைகளை அணிந்த ஒப்பனை கலைஞர்களை பயன்படுத்த வேண்டும் நடிகர்களின் வீடுகளிலேயே ஆடைகளை உடுத்த வேண்டும். செட்டில் எந்த உணவும் அனுமதிக்கப்படாது என்றும் தயாரிப்பாளர்கள் கில்டின் வழிக்காட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Bollywood plans for shooting in next few weeks. There will no Kissing and Crowd scenes in the shootings.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X