twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாக்டவுனுக்கு பிறகு மக்களை தியேட்டருக்கு இழுக்க பாலிவுட் பலே திட்டம்.. என்னன்னு பாருங்க!

    |

    மும்பை: லாக்டவுனுக்கு பிறகு மக்களை மீண்டும் தியேட்டருக்கு இழுக்க பாலிவுட் பெரும் பட்ஜெட் படங்களை அறிவித்துள்ளது.

    Recommended Video

    பழைய PROJECTOR நவீன UFO ஆனது எப்படி ? | UFO MANOJ INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்திய சினிமா முற்றிலும் முடங்கியுள்ளது. பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

    இதனால் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என ஒட்டு மொத்த இந்திய சினிமாவும், கோடி கோடியாக கொட்டி எடுத்த படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கிறது.

    100 அடி கட்அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா? பாகுபலியை வச்சுசெய்த பிஸ்கோத்.. மிரளவிடும் ட்ரெயிலர்!100 அடி கட்அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா? பாகுபலியை வச்சுசெய்த பிஸ்கோத்.. மிரளவிடும் ட்ரெயிலர்!

    ஓடிடியில் ரிலீஸ்

    ஓடிடியில் ரிலீஸ்

    சில படங்கள் ஆன்லைன் தளங்களிலேயே ரிலீஸ் செய்யப்படுகிறது. இதேபோல் இந்தி தமிழ், தெலுங்கு மொழி படங்கள் ஆன்லைன் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் பாலிவுட்டில் தில் பெச்சாரா, சகுந்தலா தேவி ஆகிய படங்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டன.

    புதிய அறிவிப்புகள்

    புதிய அறிவிப்புகள்

    இந்நிலையில் லாக்டவுனுக்குப் பிறகு மீண்டும் மக்களை தியேட்டருக்கு அழைக்க நல்ல பிஸ்னஸ் கொடுக்கும் உச்ச நட்சத்திரங்களின், படங்களின் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது பாலிவுட் சினிமா. அந்த வகையில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் பாகுபலி நடிகர் பிரபாஸ் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படம் மற்றும் அபிஷேக் கபூர் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிக்கும் காதல் கதை கொண்ட படம் ஆகியவற்றின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    பெரிய படங்கள்

    பெரிய படங்கள்

    மேலும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து அஜய் தேவ்கன் அறிவித்துள்ள படம் மற்றும் அக்ஷய் குமார் - ஏக்தா கபூர் கூட்டணியில் உருவாகும் படம் என டாப் ஸ்டார்களின் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதேபோல் இயக்குனர் மனீஷ் சர்மா பிருத்விராஜ் மற்றும் பச்சன் பாண்டே ஆகியவர்களை வைத்து கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு படங்களை அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    புதிய படங்கள்

    புதிய படங்கள்

    மேலும் கத்ரீனா கைஃப், இஷான் கட்டர் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி ஆகியோர் திகில் நகைச்சுவை படத்தில் இணைகிறார்கள். அதே நேரத்தில் ராஜ்கும்மர் ராவ் தெலுங்கு படமான ஹிட் படத்தின் ரீமேக்கை அறிவித்துள்ளார். இந்தி மட்டுமின்றி மற்ற மொழியிலும் புதிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    துல்கர் சல்மான்

    துல்கர் சல்மான்

    தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் இந்த வாரம் இயக்குனர் சிவா கோரடலாவுடன் ஒரு புதிய படத்தை அறிவித்தார். நடிகர் துல்கர் சல்மான் 1964 ஆம் ஆண்டில் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட ஒரு காதல் கதையில் நடிக்கவுள்ளார். மகேஷ் பாபு, மோகன்லால் போன்ற சிறந்த நட்சத்திரங்களும் தங்களின் புராஜெக்ட்டுகளை அறிவித்து வருகின்றனர்.

    ஸ்டுடியோ வாடகை

    ஸ்டுடியோ வாடகை

    கடந்த நான்கரை மாதங்களாக தினசரி அடிப்படையில் வருவாய் மற்றும் இழப்புகளைக் சந்தித்து வரும் திரையுலகத்திற்கு இவை துணிச்சலான படிகளாக கருதப்படுகிறது. பல படங்கள் பிரி மற்றும் போஸ்ட் புரடெக்ஷன் என பல்வேறு பணிகளை தொடர முடியாமல் சிக்கியுள்ளன. காப்பீட்டு நிறுவனங்களின் எந்த ஆதரவும் இல்லாமல் தயாரிப்பாளர்களால் ஸ்டுடியோ வாடகை மற்றும் ரத்து கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.

    திரையரங்குகளை திறந்தால்..

    திரையரங்குகளை திறந்தால்..

    படங்களுக்கு நிதியளிப்பதற்காக திரட்டப்பட்ட தொகைகளுக்கு வட்டி தொகையும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மீண்டும் மக்கள் திரையரங்குகளுக்கு வந்தால் மட்டுமே பொது முடக்கம் காலத்தில் சினிமாத்துறை சந்தித்த இழப்பை ஓரளவுக்கு சரிகட்ட முடியும் என்பதால் மக்களை திரையரங்குகளுக்கு இழுக்க தேவையான அனைத்து முயற்சிகளும் செய்யப்படும் என பாலிவுட் உச்ச நட்சத்திரங்களான ஆயுஷ்மான் குரானா மற்றும் அபிஷேக் கபூர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Bollywood plans to bring auidience to theaters. They have announced Several big budge movies to bring them theaters back.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X