என்ன தில், என்ன ஒரு வீரம்: அபிநந்தனை பார்த்து வியக்கும் பாலிவுட்
Recommended Video

மும்பை:பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன் வீரமாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டதை பார்த்து பாலிவுட்காரர்கள் பெருமைப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்பதே அனைத்து இந்தியர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியபோதிலும் அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் அபிநந்தன். அந்த இக்கட்டான சூழலிலும் அவர் நிதானமாக செயல்பட்டுள்ளார்.
ரித்திக் ரோஷன்
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள அபிநந்தன் தன்னை பற்றிய விபரங்களை தெரிவிக்க மறுத்த வீடியோ வெளியானது. அதை பார்த்துவிட்டு தான் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் பாராட்டியுள்ளார்.
ரன்வீர் சிங்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் அபிநந்தனை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
கரண் ஜோஹார்
அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று பாலிவுட்காரர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
ஹூமா குரேஷி
அபிநந்தனின் வீரத்தை பார்த்து காலா பட நடிகை ஹூமா குரேஷிக்கு கண்ணீர் வந்துவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











