காதல் மனைவியை கொரோனாவுக்கு பறிகொடுத்த அருண்ராஜாவுக்கு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் ஆறுதல்!
சென்னை: கொரோனா தொற்றுக்கு தனது மனைவியை பறிகொடுத்த இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல இயக்குநரான அருண்ராஜா காமராஜா கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர், இயக்குநர் மட்டுமின்றி பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் வலம் வந்தார். ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

சிந்துஜா மரணம்
இந்நிலையில் இவரது மனைவி சிந்துஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா நேற்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

போனி கபூர் ஆறுதல்
மறைந்த தனது மனைவிக்கு கவச உடையுடன் வந்து கதறியப்படியே இறுதிச்சடங்குகளை செய்தார். அந்தக் காட்சிகள் காண்போரை கலங்க செய்தது. இந்நிலையில் மனைவியை இழந்துள்ள அருண்ராஜா காமராஜுக்கு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் ஆறுதல் கூறியுள்ளார்.

மனைவியை இழந்துவாடும்
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, மனைவியை இழந்து வாடும் அருண்ராஜாவுக்கு என்னுடைய எண்ணங்களும் பிரார்த்தனைகளும். அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

தாங்கிக்கொள்ள தைரியம்
ஈடுசெய்ய முடியா இந்த இழப்பை தாங்கிக்கொள்ள கடவுள் உங்களுக்கு தைரியத்தை கொடுக்கட்டும். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.. இவ்வாறு போனி கபூர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் வலிமை
போனி கபூர் தமிழில் அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். ஏற்கனவே அஜித், ஹெச் வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்திருந்தார் போனி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











