»   »  முதல் படம் ரிலீஸாவதற்குள் ஓவர் சம்பளம் கேட்கும் வாரிசு நடிகை: தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

முதல் படம் ரிலீஸாவதற்குள் ஓவர் சம்பளம் கேட்கும் வாரிசு நடிகை: தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
முதல் படம் ரிலீஸாவதற்குள் ஓவர் சம்பளம் கேட்கும் வாரிசு நடிகை: தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்- வீடியோ

மும்பை: இன்னும் ஒரு படம் கூட நடித்து முடிக்காத நிலையில் சாரா அலி கான் கேட்கும் சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளர் தெறித்து ஓடுகிறார்களாம்.

பாலிவுட் நடிகர் சயிப் அலி கான், நடிகை அம்ரிதா சிங்கின் மகள் சாரா அலி கான். பெற்றோர் வழியில் நடிக்க வந்துள்ளார். அபிஷேக் கபூர் இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக கேதர்நாத் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சாரா.

இது தான் சாரா நடிக்கும் முதல் படம் ஆகும்.

சம்பளம்

சம்பளம்

பெரிய வீட்டு பெண் என்பதால் சாராவின் முதல் படம் ரிலீஸாவதற்குள் அவரை தேடி பட வாய்ப்புகள் வருகிறது. ஆனால் அம்மணியோ பல படங்கள் நடித்த ஹீரோயின்கள் கேட்கும் அளவுக்கு அதிக சம்பளம் கேட்கிறாராம்.

ஓட்டம்

ஓட்டம்

சாரா கேட்கும் சம்பளத்தால் அதிர்ச்சி அடைந்து தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகிறார்களாம். என்ன தான் வாரிசு நடிகையாக இருந்தாலும் பட உலகிற்கு அவர் புதுசு தான் என்பதை மறக்கக் கூடாது என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அபிஷேக்

அபிஷேக்

கேதர்நாத் படத்தில் நடித்து முடிக்கும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்று இயக்குனர் அபிஷேக் கபூர் சாரா அலி கானிடம் கறாராக கூறிவிட்டாராம். முதல் படம் என்பதால் சாராவுக்கு கவனம் சிதறிவிடும் என்று அஞ்சுகிறார் அபிஷேக்.

ஆசை

ஆசை

சாராவை தேடி வரும் வாய்ப்புகளை அவர் ஏற்க வேண்டும் என்று அவரின் தாய் அம்ரிதா விரும்புகிறார். ஆனால் அபிஷேக் அடம்பிடிப்பதால் வேறு வழியில்லாமல் அமைதியாக உள்ளார்.

English summary
Sara Ali Khan will make her debut with Sushant Singh Rajput In Kedarnath. But even before the release of her first movie, the star kid has started demanding a whopping amount for her next project. Bollywood producers are reportedly not happy with this attitude of Saif Ali Khan's darling daughter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil