Don't Miss!
- Sports
அந்த ஒரு சில ஷாட்கள் போதும்பா.. நியூசி, தொடரில் ரோகித் ஆடிய ஆட்டம்.. வசீம் ஜாஃபர் சுவாரஸ்ய கருத்து!
- Finance
3 நாட்களுக்கு பிறகு சரிந்த தங்கம் விலை.. நல்ல சான்ஸ் தான்.. மிஸ் பண்ணிட்டோமோ?
- Automobiles
கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா? இந்த விஷயங்களை செஞ்சா வலி இருந்த இடமே தெரியாம பறந்து போயிரும்
- News
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல! ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக சசிகலா!
- Lifestyle
நீங்க நினைத்ததை விட எடையை வேகமாக குறைக்க இந்த பழங்கள் அல்லது காய்கறி சாறுகளில் ஒன்றை தினமும் குடித்தால் போதும்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
2.25 ஏக்கர்..கிம் பீச் அருகே ஆடம்பர பங்களா..தீபிகா படுகோனே வீட்டின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
மும்பை : பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கிம் பீச் அருகே மிகவும் பிரம்மாண்டமாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டின் கிரஹபிரவேச புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Recommended Video
பாலிவுட்டின் டாப் நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமின்றி அமெரிக்க படங்களிலும் நடித்துள்ளார். உலக அளவில் பிரபலமான நபர்களில் இவரும் ஒருவர்.
தமிழில் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் அனிமேஷன் வடிவில் நடித்தார் தீபிகா. இவர் சமீபத்தில் நடித்த கெஹ்ரையன் படம் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த ஏராளமான முத்தக்காட்சிகள் இருந்ததால், இந்தபடம் பல சர்ச்சைகளில் சிக்கியது.
அட நிஜம் தான்...நம்புங்க...தீபிகா படுகோனை உணர்ச்சி வசப்பட வைக்கும் உணவு இது தான்

தீபிகா படுகோனோ
தீபிகா தற்போது சர்க்கஸ், பதான், ப்ராஜெக்ட் கே, ஜவான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருந்தாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தீபிகா தனது கிளாமர் போட்டோ ஷுட் போட்டோக்கள், கணவர் ரன்வீர் சிங்குடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் என அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை கிளப்புவார்.

ஆடம்பர பங்களா
இந்நிலையில், அலிபாக்கில் உள்ள அவர்களின் புதிய வீட்டில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிரஹபிரவேசம் நடந்தது. இதில், நடிகர் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை ரன்வீர் சிங், தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தங்களின் முகத்தைக் காண்பிக்காமல் பூஜை செய்யும் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.

எத்தனை கோடி தெரியுமா?
பிரபல இன்டீரியர் டிசைனர் வினிதா சைதன்யாவால் அலிபாக்கில் உள்ள அவர்களது வீடு கட்டப்பட்டுள்ளது. தங்களுடைய புதிய ஆடம்பரமான பங்களா கிம் பீச் கடற்கரை அருகே 2.25 ஏக்கர் பரப்பளவில் 22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 18,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த பங்களா 5BHK கிரவுண்ட் பிளஸ் முதல் மாடி பங்களா ஆகும்.

மும்பையிலும் பங்களா?
இந்த ஜோடி, மும்பை பாந்த்ராவில், ரூ.119 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில், சமீபத்தில் வீடு வாங்கியிருந்தது. 16, 17, 18 மற்றும் 19வது மாடிகளை இணைத்து, இந்த வீடு கட்டப்படுவதாக கூயிருந்தது குறிப்பிடத்தக்கது.