''ஹேப்பி பர்த்டே ஜெயாம்மா''.... ஜெயா பச்சன் குறித்த சின்ன 'ரீகேப்'....!
மும்பை: இந்தி நடிகையும், அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் இன்று தனது 65 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவர் சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றார்.
பிரபல நடிகர் அபிஷேக் பச்சனின் தாய், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாவின் மாமியார் என இவரைச் சுற்றிய பிரபல வட்டம் அதிகம். இவர் புனே, சினிமா இன்ஸ்ட்டியூட்டின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 65வது வயதில் அடி எடுத்து வைக்கும் அவரது காதல் வாழ்க்கையின் சில சுவாரஸ்யமான நினைவுப்படங்கள் உங்களுக்காக....

என்னைத்தேடி காதல் என்னும் வார்த்தையனுப்பு...
ஹுட்டி படத்தில் இருவருக்குமான அறிமுகம் கிடைத்தது. பின் அது காதலாகி.... கல்யாணமானது.

ரீல் ஜோடி.. ரியல் ஜோடி ஆன கதை
படங்களில் ஜோடி போட்டபின், நிஜ வாழ்க்கையிலும் சிறந்த ஜோடியானார்கள். 1973 மே3ல் இவர்களது திருமணம் நடைபெற்றது.

எங்கள் கல்யாணம்... சூப்பர் கல்யாணம்...
நடிகை பரிடாஜலால் இவர்களது திருமணத்திற்கு வந்திருந்தார்...

நல்ல மருமகள்...
மாமனார் ஹரிவன்ஸ் ராய் பச்சன் மற்றும் மாமியார் தேஜி பச்சனுடன் மருமகள் ஜெயா பச்சன் நல்லுறவைப் பேணி வந்தார்.

தாயான பிறகும் சினிமா..
மணமான சில வருடங்களுக்குப் பிறகு, மகள் ஸ்வேதா பிறந்த பிறகு , இந்த நட்சத்திர ஜோடி 'சோலே' படத்தில் ஜோடியாக நடித்தனர். தொடர்ந்து ஜெயாபச்சன் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மகன் அபிஷேக் பிறந்த பிறகு, படங்களைக் குறைத்துக் கொண்டார் ஜெயாபச்சன்.

நல்லதொரு குடும்பம்... பல்கலைக்கழகம்
பச்சன் குடும்பம்.... ஜெயா, அமிதாப், ஸ்வேதா மற்றும் அபிஷேக்

நடிப்புக்கு பை..பை..
குடும்பத்திற்கு முன்னுரிமை தரப் போவதாகக் கூறி, படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டுவிட்டார் ஜெயா.

பாட்டியான ஜெயா...
1997ல் மகள் ஸ்வேதா திருமணம். பேரன் , பேத்திகளுடன் மகிழ்ந்த தருணம்.

வேர் இஸ் தி பார்ட்டி...
அமிதாப்பின் 70வது பிறந்த தின விழாவில் ஜெயாபச்சன் குடும்பத்தாருடன்.
நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துக்கள்...!


Click it and Unblock the Notifications











