ஹப்பா!! இவங்க வருமானத்தையெல்லாம் கேட்டா தலை சுத்துது!!!

மும்பை: பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் யார், யார் என்று தெரியுமா உங்களுக்கு.

இவர்கள் நடிப்பதாக இருந்தால் ஒரு சிறிய கதாபாத்திரத்திற்குக் கூட கோடி,கோடியாக கொட்டித்தரக் காத்திருக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

அப்படிப்பட்ட சிலரைப் பற்றிதான் நாம் பார்க்கப்போகிறோம். அவர்கள் சம்பளம் மட்டுமே நாட்டின் வருமானத்தை தாண்டும் போல.

ஹுமைமா மாலிக்:

ஹுமைமா மாலிக்:

வெறும் 25 வயதுதான் நடக்கின்றது இவருக்கு. பாகிஸ்தான் மாடல் மற்றும் நடிகையான இவர் இம்ரான் ஆஷ்மியுடன் இணைந்து ராஜா நட்வர்லால் படத்தில் நடித்துள்ளார். இவர்தான் பாகிஸ்தானில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை. இதனை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

ஷாருக்கான்:

ஷாருக்கான்:

இப்போதும், எப்போதும் பாலிவுட்டின் இளவரசன் இவர்தான். எந்த ஒரு குடும்ப வாழ்க்கைப் பற்றிய குழப்பங்களும், இடிபாடுகளும் இவருக்கான ரசிகர்கள் கூட்டத்தை பாதிக்கவில்லை. ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இவருடைய மொத்த வருட வருமானம் 220.5 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

சல்மான் கான்:

சல்மான் கான்:

பாலிவுட்டின் சிறந்த "கான்" நண்பர்களான (அட்லீஸ்ட் திரைக்கு முன்னால்) சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவருமே இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் இண்டியாவின் பிரபலமானவர்கள் பட்டியலில் ஷாருக் முதலிடமும், அதன்பின்னர் தோனிக்கு அடுத்ததாக சல்மான் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

தோராயமாக ரூ. 157 கோடி

தோராயமாக ரூ. 157 கோடி

சல்மானின் ஆண்டு வருமானம் டபாங் வெற்றிக்குப் பின்னர் தோராயமாக 157.5 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், சல்மான் தன்னுடைய தொண்டு நிறுவனமான "பீயிங் ஹூயுமன்" மூலமாக ஏழைக்களுக்கு உதவி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பச்சன்:

அமிதாப் பச்சன்:

பாலிவுட்டில் பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் அமிதாப். மிகவும் திறமையான நடிகரான இவர் தன்னுடைய புரொடக்‌ஷன் கம்பெனியான ஏபிசிஎல் மூலமாக ஒரு பெரும் சரிவை சந்தித்தார்.

147 கோடி

147 கோடி

அந்த நேரத்தில்தான் கடவுளின் கருணையால் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி உருவாகியது. பாலிவுட்டில் அதிகமாக சம்பளம் வாங்குவோரின் லிஸ்டில் இவரும் இணைந்தார். ஃபோர்ப்ஸ் இண்டியாவின் படி இவர் 5 ஆவது இடத்தில் உள்ளார். மேலும், இவரது வருட வருட வருமானம் கிட்டதட்ட 147.5 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. டுவிட்டரில் அதிகமான ரசிகர்களைக் கொண்டவரும் இவர்தான்.

அக்‌ஷய் குமார்:

அக்‌ஷய் குமார்:

கிலாடி பட நாயகனான அக்‌ஷய் இதுவரையில் 100 இந்திப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதனால்தானோ என்னவோ இவரும் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் விரைவாக இணைந்து விட்டார். இவருடைய தளராத உழைப்புதான் இவரை வருட வருமான வரிசையில், 118.13 கோடிக்கு அதிபதி ஆக்கியுள்ளது. பத்திரிக்கைச் செய்திகளின் படி பாலிவுட் அதிகமாக வருமானவரி செலுத்தியவரும் இவர்தான்.

ரன்பீர் கபூர்:

ரன்பீர் கபூர்:

கபூர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் பர்பி பட வெற்றிக்குப் பின் ஆட்டத்தில் இணைந்துள்ளார். யேக் ஜவனி கே துவனி மூலம் இவரது புகழ் மட்டும் உச்சாணி கொம்பிற்கு ஏறவில்லை, சம்பளமும்தான். இவருடைய வருட வருமானம் 68.58 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், பெப்சி, ஓரியோ, நிசான், லேய்ஸ் போன்ற பிரபலமான நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் இவர் உள்ளார். லேய்ஸின் ஒரு சிப்ஸ் வகையின் விளம்பரத்திற்கே இவர் 25 கோடி வாங்குகின்றாராம்.

காத்ரீனா கைப்:

காத்ரீனா கைப்:

பாலிவுட்டில் மிககுறுகிய காலத்தில் வெற்றிப்படிக் கட்டுகளில் ஏறியவர் இவர். ஃபோர்ப்ஸில் 9ஆவது இடத்தில் இருக்கும் இந்தப் பச்சைக் கிளியின் வருட வருமானம் 63.75 கோடியாம். ஒரு விளம்பரத்திற்கு கிட்டதட்ட 7 கோடி ரூபாய் வாங்குகின்றாராம் இவர்.

ரித்திக் ரோஷன்:

ரித்திக் ரோஷன்:

இந்திய சினிமாவின் சூப்பர் ஹீரோவான இவர் கிருஷ் 3 மூலம் அதை உண்மையாக்கி உள்ளார். 10ஆவது இடத்தில் உள்ள ரித்திக்கின் வருட வருமானம் 62.5 கோடியாகும்.

தீபிகா படுகோன்:

தீபிகா படுகோன்:

தொடர்ச்சியாக பாலிவுட் படங்களின் மழையில் நனைந்து வரும் இவர் வருமானமும் அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. இவருடைய வருட வருமானம் ஃபோர்ப்ஸ் இண்டியாவின்படி கிட்டதட்ட 39.5 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X