ஏனுங்க மோடிஜி, இதுக்கு மட்டும் உங்களுக்கு நேரம் இருக்கா?: விளாசும் நெட்டிசன்ஸ்
டெல்லி: பாலிவுட் நடிகர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடியை மக்கள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட், ரன்பிர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், கரண் ஜோஹார், ரோஹித் ஷெட்டி, ராஜ்குமார் ராவ், ஆயுஷ்மான் குரானா, சித்தார்த் மல்ஹோத்ரா, ஏக்தா கபூர், பூமி பட்னேகர் உள்ளிட்டோர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளனர்.
நாட்டை மேம்படுத்துவது, சினிமாவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.
ரன்வீர் சிங்
பாலிவுட் பிரபலங்கள் நரேந்திர மோடியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளனர். நடிகர் ரன்வீர் சிங்கோ மோடியை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மோடி
ஒரு நாட்டின் பிரதமராகிய மோடி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் பல இருக்க சினிமாக்காரர்களுடன் செல்ஃபி எடுக்க நேரம் இருக்கிறதா என்று ஆளாளுக்கு அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
கலாய்
எனக்கு பிடித்த நடிகர் நடுவில் இருக்கிறார் என்று ஒருவர் மோடியை கலாய்த்துள்ளார்.
கரண்
மோடி நல்ல நடிகர் அவரை உங்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யுங்கள் என்று ஒருவர் இயக்குனர் கரண் ஜோஹாரிடம் கூறியுள்ளார்.
நடிப்பு
மோடியிடம் நடிப்பு கற்க சென்றதாக பாலிவுட் பிரபலங்களையும் சேர்த்து கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











