‘மூன்று முடிச்சு‘ சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை..காதலரிடம் விசாரணை!
மும்பை : பிரபலமான இந்தி சீரியல் நடிகை வைஷாலி தாக்கர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சாசுரால் சிமார் கா என்ற இந்த தொடர், தமிழில் மூன்று முடிச்சு என்ற பெயரில் வெளியானது. இந்தி சின்னத்திரை ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடருக்கு, தமிழிலும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த சீரியலில் நடித்த 26 வயதேயான வைஷாலி தாக்கர் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடிகை வைஷாலி தாக்கர்
இந்தியில் பல்வேறு பிரபல நாடகங்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் வைஷாலி தாக்கர். மத்தியப் பிரதேசத்தில் இந்தூரில் தனது தந்தை, சகோதரருடன் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்த வைஷாலி வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். வைஷாலி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

டார்ச்சர் செய்த காதலன்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து, வீட்டை ஆய்வு செய்த போலீசார், நடிகை வைஷாலி எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.அதில், நடிகை வைஷாலியின் முன்னாள் காதலர் அதிகளவில் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும்,அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் தற்கொலை செய்து கொள்வதாக அந்த கடிதத்தில் எழுதி உள்ளார்.

காதலனிடம் விசாரணை
முன்னதாக தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்த அவர், தனக்கு வரப்போகும் கணவர் கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் அபிநந்தன் சிங் என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் அபிநந்தனை தான் திருமணம் செய்யப்போவதில்லை என்று பதிவிட்டிருந்த நிலையில், தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று இறுதிச்சடங்கு
இதையடுத்து, நடிகை வைஷாலி தாக்கரிடம் போலீசார் காதலர் அபிநந்தன் சிங்கை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலும், அவரது போனை கைப்பற்றிய போலீசார் கடைசியாக அவர் யார் யாருக்கு போன் செய்துள்ளார். என்ன பேசினார் என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு இன்று மதியம் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும்.


Click it and Unblock the Notifications











