சண்டை காட்சியில் ஷாருக்கான் காயம்.. சிகிச்சைக்காக அமெரிக்கா விரைந்தார்.. ரசிகர்கள் கவலை!
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தற்போது 'கிங்' என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காயம் காரணமா சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவிற்கு சென்று இருப்பதால், கிங் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
பதான், ஜவான் திரைப்படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, ஷாருக் கான் கிங் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் உள்ள கோல்டன் டோபேக்கோ ஸ்டுடியோவில் தீவிரமான சண்டைக்காட்சியை படமாக்கும்போது ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. காயம் காரணமாக ஷாருக் கானுக்கு ஒரு மாதம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், எப்படி காயம் ஏற்பட்டது, என்ன காயம் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாக வில்லை.

ஷாருக்கான் : ஆனால், ஷாருக் கான் தனது குழுவினருடன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இது தீவிரமான காயம் இல்லை, தசைப்பிடிப்புதான் என்றும், இதுபோன்ற ஸ்டண்ட் காட்சிகளில் ஷாருக்கிற்கு ஏற்கனவே பலமுறை காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஷாருக் கான் குணமடைந்த பிறகு 'கிங்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஃபிலிம் சிட்டி, கோல்டன் டோபேக்கோ ஸ்டுடியோ மற்றும் ஒய்ஆர்எஃப் ஸ்டுடியோவில் நடைபெறவிருந்த 'கிங்' திரைப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இதுகுறித்து, ஷாருக் கான் மற்றும் அவரது குழுவினர் எந்த ஒரு அதிகாரப்பூர்வமாக தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.
'கிங்' திரைப்படம் ஷாருக் கான் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாகும்,
இந்த படத்தில் சித்தார்த் ஆனந்த் இயக்க, ஷாருக் கான் தனது மகள் சுஹானா கானுடன் முதன் முதலாக இணைந்து நடிக்கிறார். மேலும், இப்படத்தில் தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, அபிஷேக் பச்சன், ஜெய் தீப் அலாவத், அனில் கபூர், அர்ஷத் வார்சி மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











