ரூ.600 கோடி பட்ஜெட்..அதிரடியாக ரெடியாகும் ப்ராஜெக்ட் கே..அமிதாப் பச்சனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: பிரபாஸின் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வரும் அமிதாப் பச்சன் வாங்கி உள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிப்பில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ப்ராஜெக்ட் கே.
கீர்த்தி சுரேஷ் நடித்து, தேசிய விருதை பெற்ற நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

ப்ராஜெக்ட் கே: ரூ.600 கோடி பட்ஜெட்டில் அறிவியல் சார்ந்த புனை கதை பாணியில் உருவாக்கப்பட்டு வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதற்காக 20 நாட்களுக்கு கமல்ஹாசன் கால்ஷீட் கொடுத்ததாகவும், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்ற தகவல்களும் சோஷியல் மீடியாவில் தகவல்கள் கசிந்து வருகின்றன.
டீசர் வெளியீடு: பான் இந்தியா படமாக உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தின் டீசரை பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.,கலிஃபோர்னியாவில் உள்ள சான் டியாகோவில் நடைபெறும் சான் டியாகோ காமிக்-கான் விழாவில் படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 20ம் தேதி நடைபெறும் விழாவில் தீபிகா படுகோனே, பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் டீசரை வெளியிட உள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பு: இதுவரை இந்திய படங்களின் டீசர் எதுவும் ஹாலிவுட் வட்டாரத்தில் வெளியிடாத நிலையில், ப்ராஜெக்ட் கே படத்திற்கு அந்த பெருமை கிடைத்துள்ளது. இதன் மூலம் பாலிவுட், கோலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட் வட்டாரத்திலும் இந்திய படம் பேசப்படும். ப்ராஜெக்ட் கே அறிவியல் சார்ந்த புனைக்கதை என்பதால், படத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமிதாப் பச்சன் சம்பளம்: தெலுங்கு, இந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். மேலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் ஷாஹேன்ஷா நடிகர் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். இவர் இந்த படத்தில் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











