Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'விஜய் 62' இன்ட்ரோ சாங் பாடுவது யார் தெரியுமா?
Recommended Video
சென்னை : நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது ஸட்ரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு தடைபட்டிருக்கும் இந்த நேரத்தில் படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வாங்கிவிடத் திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் விஜய்க்கான அறிமுகப் பாடலை பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகரான விபின் அனேஜாவை பாட வைத்து பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளில் இந்தி பாடல்களை பாடி வரும் விபின் அனேஜா, இதுவரை தமிழ்ப் பாடல்களை பாடியதில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிக்கும் படத்திற்காக பாடுவதன் மூலம் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார் விபின் அனேஜா. 'மெர்சல்' படத்தில் 'ஆளப்போறான் தமிழன்' பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக்கை விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அந்தப் பாடலைப் பாடிய கைலாஷ் கெர் உள்ளிட்டோர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர். அதைப் போலவே, 'விஜய் 62' இன்ட்ரோ சாங் பாடுவதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பார் பாடகர் விபின் அனேஜா.