பாலிவுட் பாடகி சுனிதி சவுகானுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தை கலக்கும் வாழ்த்து செய்தி !
மும்பை : பாலிவுட் திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி பிரபலமான பாடகியாக வலம் வரும் சுனிதி சவுகான் பாலிவுட் இசை ரசிகர்களின் நாடித் துடிப்பாக இருந்து வருகிறார்.
உலக அளவில் பிரபலமான கமலி கமிலி, தூம் மச்சாலே உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ள இவர் இப்பொழுது ஹிந்தி திரைப்படத் துறையில் மிகப் பிரபலமான பாடகியாக உள்ளார்.
சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகும் பார்ட்டி பாடல்களில் இவரது குரல் இல்லாமல் பெரும்பான்மையான பாடல்கள் வெளியாவதில்லை, அந்த அளவுக்கு தனது குரலின் மூலம் ரசிகர்களை பாடல்கள் மூலம் மயக்க வைத்திருக்கும் நடிகை சுனிதி சவுகான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.

விருப்ப பாடகராக
இந்திய திரைப்படத் துறையைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் புதுப்புது பாடகர்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றார்கள். அவ்வாறு அறிமுகமாகும் பாடகர்கள் தங்களது மயக்கும் குரல்களின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்து அவர்களின் விருப்ப பாடகராக ஆகிவிடுகின்றனர்.

4 வயதிலேயே
சிறுவயது முதலே பாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட சுனிதி தனது 4ஆம் வயதிலேயே பல்வேறு கூட்டங்களில் பாடல்களைப் பாடத் தொடங்கிவிட்டார். இவ்வாறு குழந்தை பாடகராக பலராலும் அறியப்பட்ட சுனிதி தனது 12ஆம் வயதில் சாஸ்த்ரா என்ற திரைப்படத்தின் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கினார்.

சிறந்த பாடகிக்காக
பாலிவுட் திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை தொடர்ந்து பாடி வந்த இவருக்கு பிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் சிறந்த பாடகிக்காக கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இவர் பாடிய பெரும்பான்மையான பாடல்கள் இன்றுவரை ரசிகர்களை மிகவும் கவர்ந்து வெற்றி பெற்ற நிலையில் தூம் மச்சாலே, காமிலி காமிலி, சோர் பசரி என பல பாடல்கள் அவரின் குரலில் வெளிவந்த சிறந்த பாடல்களாக பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாலிவுட் இளசுகள்
பிரபலமான பாடகியாக வலம் வரும் சுனிதி சவுகான் ஒரு சில திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் பல பாடல்களில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியும் உள்ளார். இவ்வாறு தனது மெய்மறக்கும் குரலின் மூலம் பாலிவுட் இளசுகளை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் பாடகி சுனிதி சவுகான் ஆகஸ்ட் 14 ஆம் தேதியான இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி அவரது தீவிரமான ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











