பிஎம்டபிள்யூ கார்.. வைர நெக்லஸ்.. கியாரா அத்வானிக்கு கோடிக்கணக்கில் குவிந்த திருமணப்பரிசு!

புதுடெல்லி : பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி தம்பதியினருக்கு பிஎம்டபிள்யூ,வைர நெக்லஸ், வைர கைப்பை என கோடிக்கணக்கில் பரிசுப்பொருட்களை திருமண பரிசாக கொடுத்துள்ளனர்.

பாலிவுட்டின் காதல் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் நீண்ட நாட்களாகவே காதலித்து வந்தனர். 2018ம் ஆண்டு வெளிவந்த ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின்போது இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

இதன்பின் தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கிய ஷெர்ஷா படத்தில் ஒன்றாக நடித்தனர். பாக்ஸ் ஆபீஸில் இப்படம் பெரிய வசூலை குவித்தது. இந்தப் படத்தில் இருந்து இருவரும் காதலர்களாக பல இடங்களில் சுற்றி வந்தனர்.

பிரம்மாண்ட திருமணம்

பிரம்மாண்ட திருமணம்

சித்தார்த் மல்ஹோத்ரா கியாரா அத்வானி திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மரில் உள்ள சூர்யாகர் ஹோட்டலில் நடந்தது. சங்கீத் மற்றும் மெஹந்தி நிகழ்ச்சிகளுக்காக ஜெய்சால்மரின் சூர்யாகர் ஹோட்டலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்களால் மண்டபம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமணத்தில் 100 விஐபிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

டெல்லியில் வரவேற்பு

டெல்லியில் வரவேற்பு

ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்ற நிலையில், சித்தார்த்தின் சொந்த ஊரான புது டெல்லியில் பிப்ரவரி 12ந் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சிக்காக கியாரா அத்வானி, பச்சை மரகதம் மற்றும் வைரங்கள் கொண்ட வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் கவுனை அணிந்திருந்தார். அதே போல மணமகன் சித்தார்த்தும் பளபளப்பான கருப்பு நிற கோட்டில் அழகாக காணப்பட்டார்.

வாழ்த்திய பிரபலங்கள்

வாழ்த்திய பிரபலங்கள்

வரவேற்பு நிகழ்ச்சிக்கு அண்மையில் குழந்தை பெற்ற ஆலியா பட், கரண் ஜோஹர், சல்மான் கான், அக்ஷய் குமார், கரீனா கபூர், கஜோல் மற்றும் அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன், ஷாஹித் கபூர் அவரது மனைவி மீரா ராஜ்புத், வித்யா பாலன், வித்யா பாலனின் கணவர் சித்தார்த் ராய் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

70 லட்சம் ரூபாயில் கை பை

70 லட்சம் ரூபாயில் கை பை

திருமண மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள் தம்பதியினருக்கு விலை உயர்ந்த பொருட்களை திருமண பரிசாக அளித்துள்ளனர்.அதில் பாலிவுட்டின் சிறந்த இயக்குனரான கரண் ஜோகர், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானிக்கு பல லட்சம் ரூபாயில் பரிசளித்துள்ளார். அதில், கியாராவுக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள கை பையையும், சித்தார்த்துக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள குஸ்ஸி ஜாக்கெட்டையும் பரிசாக கொடுத்துள்ளார்.

மாலத்தீவுக்கு சுற்றுலா டிக்கெட்

மாலத்தீவுக்கு சுற்றுலா டிக்கெட்

அதே போல, பாலிவுட் நட்சத்திரங்களுடன் நல்ல தொடர்பு வைத்துள்ள, இஷா அம்பானி 2 கோடி மதிப்பிலான வைர குவளையை பரிசாக கொடுத்துள்ளார். கியாரா அத்வானியின் நெருங்கிய தோழியான ஷாஹித் கபூர் கியாரா அத்வானிக்கு மாலத்தீவுக்கு இன்ப சுற்றுலா செல்ல ரூ.50 லட்சம் மதிப்பிலான பரிசை வழங்கி உள்ளார். மேலும், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இருவருடனும் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார். இவர், ரூ. 1 கோடி மதிப்புள்ள திருமண புகைப்படத்தை செய்ய வைரத்தால் ஆன ப்ரோமை பரிசாக கொடுத்துள்ளார்.

பிஎம்டபிள்யூ கார்

பிஎம்டபிள்யூ கார்

சால்மான் கான் படப்பிடிப்பு தளத்தில் கியாரா அத்வானியை எப்போதும் அன்பு தங்கை என்று பாசத்தோடு அழைக்கும் சல்மான் கான், தனது அன்பு தங்கைக்கு திருமண பரிசாக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்து மகிழ்ந்துள்ளார். அதே போல, கியாரா அத்வானிக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸை பரிசாக கொடுத்துள்ளார். கியாரா அத்வானி மற்றும் சித்தார்த்தின் திருமணத்தில் கோடிக்கணக்கில் பரிசு பொருள் குவிந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X