கொஞ்சம் கூட அழகு குறையவே இல்லை கரீனா…வர்ணிக்கும் ரசிகர்கள் !

மும்பை : பாலிவுட் நடிகை கரீனா கபூர் நீண்ட நாட்களுக்குப்பிறகு படப்பிடிப்பு பணியை தொடங்கினார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலிவுட் கவர்ச்சி கன்னியாக கரீனா கபூர் 2000ம் ஆண்டு வெளியாளி ரெப்யூஜீ என்ற படத்தில் நடித்தார். அவர் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.

பெரும் வசூலை வாரிக்குவித்த கபி குஷி கபி கம் என்ற திரைப்படத்தில் நடித்தார் இதையடுத்து இந்திய அளவில் இவரது பெயர் புகழ் பெற்றது.

வெற்றிப்படங்கள்

வெற்றிப்படங்கள்

முன்னணி நடிகையாக வலம் வரும் கரீனா கபூர், ஷாருக்கான், அக்சய் குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கவர்ச்சியில் தாராளம் காட்டும் இவருக்கு எல்லைத்தாண்டியும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சைஃப் அலிகான்

சைஃப் அலிகான்

இந்நிலையில் நடிகர் சைஃப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கரீனா கபூர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்கு தைமூர் அலிகான் என பெயர் வைத்துள்ளனர்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு இரண்டாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக சைஃப் அலி கான் புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பணி தொடங்கினார்

2வது பிரசவத்திற்கு பிறகு படப்பிடிப்பு வேலையில் ஈடுபடாமல் இருந்த, இவர் நீண்டுநாள் ஓய்வுக்கு பிறகு தனது பணியை மீண்டும் தொடங்கி உள்ளார். முகக்கவசம் அணிந்து கொண்டு வந்த அவரை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பிங்க் நிறந்தில் அவர் அணிந்திருந்த உடை அவரை மேலும் அழகாக காட்டியது. இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் கரீனா அழகு கொஞ்சம் கூட கூறையவே இல்லையே என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X