அவங்களை ஒரு போராளி மாதிரி பார்க்கிறேன்.. நடிகை நயன்தாராவைப் பாராட்டும் பிரபல இந்தி ஹீரோயின்!

By

சென்னை: நடிகை நயன்தாரா ஒரு போராளியை போல தெரிகிறார் என்று பிரபல இந்தி நடிகை கேத்ரினா கைஃப் பாராட்டியுள்ளார்.

Recommended Video

Workout From Home | Nakul |Kajal Agarwal | Katrina Kaif

பிரபல இந்தி நடிகை கேத்ரினா கைஃப். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெராப், பத்மலட்சுமி உட்பட பலர் நடித்த பூம் என்ற இந்தி படம் மூலம் அறிமுகமான இவர், இப்போது அங்கு டாப் ஹீரோயின்.

அங்ரேஸி மீடியம்

அங்ரேஸி மீடியம்

ராம்கோபால் வர்மாவின் சர்க்கார், ரேஸ், சிங் இஸ் கிங், பாடிகார்ட், அக்னிபாத், ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சில தெலுங்கு படங்களில் நடித்த இவர் இப்போது இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக சமீபத்தில் மறைந்த நடிகர் இர்பான் கானுடன், அங்ரேஸி மீடியம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அழகு பொருட்கள்

அழகு பொருட்கள்

அடுத்து அக்‌ஷய் குமாருடன், 'சூரியவன்ஸி' என்ற படத்தில் நடித்துள்ளார். ரோகித் ஷெட்டி இயக்கி உள்ள இந்தப் படம் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. லாக்டவுன் முடிந்ததும் ரிலீஸ் ஆக உள்ளது. நடிகை கேத்ரினா கைஃப் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் 'Kay Beauty' என்ற அழகு சாதனப் பொருட்கள் விற்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

விளம்பர படம்

விளம்பர படம்

லிப்ஸ்டிக், முகப்பவுடர், முகத்துக்கான கீரிம் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார். இதற்கான விளம்பர படத்தில், சில நடிகைகள் நடித்துள்ளனர். அதில் ஒருவர் நயன்தாரா. கடந்த வருடம் இவர் இதில் நடித்திருந்தார். அதற்காக நடிகை கேத்ரினா கைஃப் அப்போது நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

போராளியாக

போராளியாக

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாராவை புகழ்ந்துள்ளார் கேத்ரினா கைஃப். அவர் கூறியிருப்பதாவது: 'அவர் என்னை பிரமிக்க வைப்பவராகவும் வலிமையான வராகவும் இருப்பதை கண்டுகொண்டேன். அவர் ஒரு போராளியாக இருக்கிறார். அதைத் தாண்டியும் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது.

கண்ணாடியில்

கண்ணாடியில்

அவர் இளம் வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். அவருக்கு அவர் வேலை என்னவென்று தெரிகிறது. அவர் குறிப்பிடத்தகுந்தவர். அவர் விளம்பரத்துக்கான படப்பிடிப்பில் இருந்தபோது, எனது டீமிடம், என்னைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல இருக்கிறது என்று சொன்னேன்' என்று கூறியுள்ளார். பாலிவுட் நடிகை ஒருவர் நயன்தாராவை புகழ்ந்திருப்பதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X