பாலிவுட்டில் சிக்கிய இயக்குநர்.. காத்திருக்கும் சிவகார்த்திகேயன்.. சொதப்பிய ஏ.ஆர். முருகதாஸ்!

சென்னை: பாலிவுட் ஸ்டார் சல்மான் கானை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், அவருக்கு வரும் அடுத்தடுத்த கொலை மிரட்டலால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏ.ஆர். முருகதாஸ் சிக்கலில் சிக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். அஜீத் நடித்த தீனா படத்தை இயக்கி இயக்குநராக மாறிய இவர், கேப்டன் விஜயகாந்தை வைத்து 'ரமணா' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து தொடர்ந்து கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார், தர்பார் என அடுத்தடுத்து படத்தை இயக்கினார்.

salman khan ar murugadoss

ஏ.ஆர்.முருகதாஸ்: ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கிய இவர் தற்போது பாலிவுட் ஸ்டார் சால்மான் கானை வைத்து, சிக்கந்தர் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சல்மான் கான் பெரும் மனக்கவலையில் இருக்கிறார். அதாவது, சல்மானின் நெருங்கிய நண்பரும், மகராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னாய் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

மான் வேட்டை சர்ச்சை: இந்த பிஷ்னாய் அமைக்கும் சல்மான் கானுக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து இருக்கு. 1998ம் ஆண்டு படப்பிடிப்பின் போது அபூர்வ வகை பிளாக்பக் மான்களை வேட்டை ஆடிய வழக்கில் பகை உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், மானை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். இதற்காக சல்மான் கானுக்கு 2018 ஆம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், சல்மான் கான் சிறைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டார். இந்த அரிய வகை ன் பிஷ்னாய் என்ற ஒரு இன மக்கள் கடவுளாக பாவித்து வருகின்றனர். இதனால், அந்த கும்பலின் தலைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்கவே இல்லை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சிக்கல் ஏ.ஆர்.முருகதாஸ்: இதனால், சல்மான் எங்கு சென்றாலும் குண்டு துளைக்காத காரில், பவுன்சர்கள் புடை சூழவே வருகிறார். இந்த சூழ்நிலையில், சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்துவது சரியாக இருக்காது என்பதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஏ.ஆர் முருகதாஸ் சென்னை திருப்பி உள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருந்தார். இதற்காக சிவகார்த்திகேயன் அமரன் படத்தை முடித்துவிட்டு, முருகதாசுக்காக காத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் கொடுத்த கால்ஷீட் எல்லாம் வீணாகி வருவதாக சொல்லப்படுகிறது. தர்பார் படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸின் எந்த படமும் வெளியாகாத நிலையில் அடுத்த ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என் சூழ்நிலையில் இருக்கும் முருகதாசுக்கு இது ஒரு சோதனை காலமாகவே மாறி உள்ளது.

கஜினி இரண்டாம்பாகம்: மேலும், சிவகார்த்திகேயன் படத்தை முடித்துவிட்டு, முருகதாஸ் கேரியரில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்றான கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியில் இயக்க உள்ளார். அதற்கான பேச்சு வார்த்தை அமீர் கான் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இடையே நடந்துமுடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X